நூதன முறையில் ஏ.டி.எம்-மில் கொள்ளை : எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்களில் தற்காலிகமாக பணம் எடுக்க தடை!

எஸ்பிஐ டெபாசிட் வசதியுள்ள ஏடிஎம்மில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால், எஸ்பிஐ வங்கியின் டெபாசிட் ஏடிஎம்மில் தற்காலிகமாக பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஏடிஎம்களில் டெல்லியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் நூதன முறையில் பணம் திருடி உள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னையில் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து சென்னையில் உள்ள  தரமணி, வடபழனி, வேளச்சேரி ஆகிய பகுதிகளிலுள்ள ஏ.டி.எம்களில் சென்சாரை மறைத்து இந்த இளைஞர்கள் பணம் திருடி உள்ளது அம்பலமாகியுள்ளது. கடந்த 19ஆம் தேதி … Read more

ஏடிஎம் களில் பணம் எடுத்தல் தொடர்பான நான்கு விதிமுறைகள் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!

ஏடிஎம் களில் பணம் எடுத்தல் தொடர்பாக,வாடிக்கையாளர் கட்டணம் உள்ளிட்ட நான்கு விதிமுறைகளை,ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியானது (ஆர்.பி.ஐ.) ஏ.டி.எம்.மூலமாக பணம் எடுத்தல் தொடர்பான சில முக்கிய மாற்றங்களை வியாழக்கிழமையன்று அறிவித்தது.அதன்படி,இலவச வரம்புக்கு அப்பாற்பட்ட பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபடும்போது சம்மந்தப்பட்ட வங்கிகளால் பணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஏடிஎம் களில் பணம் எடுத்தல் தொடர்பான நான்கு விதிமுறைகள்:  சொந்த வங்கியில் இருந்து ஐந்து இலவச பரிவர்த்தனைகள்: ஒரு ஏடிஎம் பயனருக்கு,ஐந்து இலவச பரிவர்த்தனைகளானது (பணம் எடுத்தல் அல்லது … Read more

ஏ.டி.எம் பணப்பரிவர்த்தனை கட்டணம் உயர்வு- ரிசர்வ் வங்கி அதிரடி..!

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் இலவச ஏடிஎம் பண பரிவர்த்தனையை மேல் மேற்கொள்ளளும் ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் ரூ.21  ஆக உயர்த்தப்படுகிறது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஒரு வங்கியின் வாடிக்கையாளர் அதே வங்கியின் ஏடிஎம் மூலம் மாதம் 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பணப்பரிவர்த்தனை கட்டணமில்லாமல் செய்யலாம். இதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள … Read more

#BREAKING: ஹைதராபாத்தில் தனியார் வங்கி ஏடிஎம்-ல் துப்பாக்கிச்சூடு..!

ஹைதராபாத்தில் தனியார் வங்கி ஏடிஎம்-ல் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் காயம். சைபராபாத் போலீஸ் எல்லைக்குட்பட்ட குகட்பள்ளியில் உள்ள எச்.டி.எஃப்.சி வங்கி ஏடிஎம்மில் வங்கி ஊழியர்களால் பணத்தை நிரப்பி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு பாதுகாவலர் மற்றும் வங்கி அதிகாரி காயமடைந்தனர். காயமடைந்த இருவருமே மருத்துவமனைக்கு அழைத்து செல்லபப்ட்டனர். அங்கு அவர்களின் நிலை சீராகிவிட்டதாக கூறப்படுகிறது. கொள்ளையர்கள் பணத்தை திருடி கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர். … Read more

நான்கு மணி நேரத்தில் மூன்று ஏடிஎம்களில் குறிவைத்து கொள்ளையடிப்பு..!

மேற்கு டெல்லியின் மடிபூர், கீர்த்தி நகர் மற்றும் நாரைனா விஹார் ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை நான்கு மணி நேரத்திற்குள் பைக் மற்றும் காரில் வந்த சில மர்ம நபர்கள் மூன்று ஏடிஎம் கொள்ளையடித்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இந்த மர்ம நபர்களின் அடையாளத்தை சனிக்கிழமை இரவு வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், இது ஹரியானாவில் உள்ள மேவாட்டைச் சேர்ந்த ஒரு கும்பலின் வேலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பஞ்சாபி பாக், கீர்த்தி நகர் மற்றும் நாரைனா … Read more

ATM-ல் பணம் எடுக்கத் தெரியாதவரிடம் 50,000 மோசடி.!

புதுச்சேரி மாவட்டத்தில் ATM-ல் பணம் எடுக்கத் தெரியாதவரிடம் 50,000 மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி மாவட்டம் கிருமாம்பாக்த்தில் வசித்து வந்தவர் லட்சுமணன், இவர் கிருமாம்பாக்த்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு ATM- ல் பணம் எடுக்கத்தெரியாததால் பணம் எடுக்க தெரிந்தவர்களை அழைத்து வந்து செலவிற்காக பணம் எடுத்து வந்துள்ளார், அந்த வகையில் தனது உறவினர் வீடிற்கு சென்று தனது வீட்டிற்கு செல்லும் போது பணம் எடுக்க ஒரு நபரிடம் … Read more

இந்தியன் வங்கி ஏடிஎம்மில் தீ விபத்து.!

அகமதாபாத்தின் ஜஷோதனகரில் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் தீ விபத்து ஏற்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஜஷோதனகரில் உள்ள இந்தியன்  வங்கிக்கு வெளியே  இரண்டு பண விநியோக இயந்திரங்களும்,  ஒரு பாஸ் புக் பிரிண்டரும் இயந்திரமும் இருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு ஒரு தீயணைப்பு வாகனம் விரைந்து வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதனால்,  ஏடிஎம்-க்கு அடுத்ததாக அமைந்துள்ள வங்கி கிளைக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் … Read more

நீங்கள் ATM-ல் பணம் எடுப்பவரா? இன்று முதல் இந்த சலுகை ரத்து!

இனிமேல் ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்களுக்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின், தீவிர பரவலால் கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், மக்கள் நலனை கருத்தில் கொண்டு, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்களுக்கு 3 மாதங்களுக்கு சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஜூலை-1 முதல் இந்த தளர்வு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றிலிருந்து இந்த சலுகைகள் றது செய்யப்பட்டு, இனிமேல் ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்களுக்கு சேவை … Read more

ATM-ல் பணம் எடுப்பவர்களுக்கு ஜூலை-1க்கு பின் இந்த தளர்வு ரத்து!

ஜூலை-1க்கு பின் பழைய முறைப்படி கட்டணம் வசூலிக்கப்படும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின், தீவிர பரவலால் கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், மக்கள் நலனை கருத்தில் கொண்டு, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்களுக்கு சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஜூலை-1 முதல் இந்த தளர்வு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை-1க்கு பின் பழைய முறைப்படி கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுசேரியில் புதிய அறிமுகம்.! நடமாடும் ஏ.டி.எம் இன்று முதல்…

புதுசேரி அரசு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நடமாடும் ஏ.டி.எம் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வர அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், பொது மக்களின் அலைச்சலை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று புதுசேரி அரசு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நடமாடும் ஏ.டி.எம் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை புதுசேரி முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.