டெல்லியில் மேலும் ஒரு வாரம் முழு பொதுமுடக்கம் நீட்டிப்பு.!

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், முழு பொதுமுடக்கம் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வரக்கூடிய சூழலில் முழு பொதுமுடக்கம் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒருவாரம் நீட்டிப்பு செய்து மாநில அரசு அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. … Read more

மகத்தான வெற்றியைப் பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் – டெல்லி முதல்வர் ட்வீட்

தமிழக சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிபெற்றுள்ள முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப முதலே திமுக கூட்டணி முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 149 இடங்களிலும், அதிமுக கூட்டணி 84 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. இதில் … Read more

என்ன ஒரு போட்டி!! அபார வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துக்கள் – அரவிந்த் கெஜ்ரிவால்

மேற்கு வங்கத்தில் அபார வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். மேற்கு வங்க மாநிலத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பல்வேறு சுற்றுகளை கடந்த வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, மம்தா பானர்ஜி தலைமையில் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் 206 இடங்களிலும், பாஜக 83 இடங்களிலும், சிபிஎம் கூட்டணி 1, மற்றவை 2 என முன்னிலை வகித்து வருகிறது. … Read more

விவசாய அமைப்புகளின் தலைவர்களுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விவசாய அமைப்புகளின் தலைவர்களுடன் ஆலோசனை  நடத்தி வருகிறார்.  மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 3 மாதத்திற்கு மேலாக விவசாய அமைப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.மத்திய அரசு தரப்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தை தோல்வியிலே முடிந்தது.தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு விதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விதான் சபையில் விவசாய அமைப்புகளின் … Read more

விவசாய அமைப்பு தலைவர்களுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ஆலோசனை

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விவசாய அமைப்புகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 3 மாதத்திற்கு மேலாக விவசாய அமைப்பினர்  போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.மத்திய அரசு தரப்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தை தோல்வியிலே முடிந்தது.தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு விதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை விதான் சபையில் விவசாய அமைப்புகளின் … Read more

டெல்லி வன்முறை: கைதான 115 பேரின் பட்டியல் வெளியீடு – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி டிராக்டர் பேரணி வன்முறையில் கைதாகி சிறையில் உள்ள 115 பேரின் பட்டியலை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். கடந்த ஜனவரி 26- ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். அப்போது, அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பே டெல்லியில் நுழைந்ததால், விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகைக்குண்டி வீசப்பட்டது. பின்னர் விவசாயிகளுக்கு, காவல்துறைக்கும் இடையே வன்முறை வெடித்தது. பின்னர் போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து செங்கோட்டையில் தேசிய கொடி பறந்த கம்பத்தில் … Read more

அடுத்த 2 ஆண்டுகளில் இந்த 6 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

அடுத்த 2 ஆண்டுகளில் 6 மாநிலங்களின் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி முதல்வரும், ஆத்மி கட்சியின் (AAP) தேசிய அழைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், இன்று டெல்லியில் கபாஷேராவில் நடைபெற்ற அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசியபோது, ஆம் ஆத்மி கட்சியின் நல்லாட்சி குறித்து நாடு முழுவதும் மக்கள் பேசி வருகிறார்கள். நாட்டின் அனைத்து இடங்களிலும், மக்கள் மின்சாரம் மற்றும் நீர் மானியங்களையும், டெல்லியில் இருக்கும் நலத்திட்டங்களை விரும்புகிறார்கள். நாம் … Read more

நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை, வாழ்க தமிழ் – கெஜ்ரிவால்

முதல்வர் பழனிசாமியின் நன்றி தெரிவித்ததை தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்தற்காக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்துள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த … Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் நன்றி.!

டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்தற்காக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் “டெல்லியில் தமிழ் அகாடமி” அமைத்துள்ள மாண்புமிகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். தமிழ் … Read more

எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு இலவச வைஃபை – டெல்லி அரசு அறிவிப்பு

எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு இலவச வைஃபையை டெல்லி அரசு அறிவித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இலவச வைஃபை வசதியை அறிவித்துள்ளது. இன்று செய்தியாளர் கூட்டத்தில்  பேசிய, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சாதா, முதல் வைஃபை சேவை 24-48 மணி நேரத்திற்குள் தொடங்கும் என்றார். இதற்கிடையில், விவசாயிகள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தங்கள் குடும்பத்தினருடன் தொடர்புகொள்வதில் சிரமங்களை … Read more