இன்று பிரபல கர்நாடக இசைப்பாடகி .எம். எல். வசந்தகுமாரி நினைவு தினம்…

இன்று பிரபல கர்நாடக இசைப்பாடகி, மதிப்பிற்குரிய திருமதி.எம். எல். வசந்தகுமாரி (M. L. Vasanthakumari, ) அவர்களின் 27- வது ஆண்டு நினைவு தினம்.: 31 , அக்டோபர் 1990 இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி ஆவார். நேயர்களால் எம். எல். வீ என அன்புடன் அழைக்கப்பட்டவர். பல இந்திய மொழிகளில் வெளிவந்த பாடல்களுக்குப் பின்னணிப் பாடகியாகவும் இருந்துள்ளார். . சங்கீத கலாநிதி விருதினை குறைந்த வயதில் பெற்ற பெண் கலைஞர் எனும் … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம் !

ஆயிரம் ஆண்டு பழமையானது. உயரம் 192 . ரசிகமணி டி கே சி அவர்களின் முயற்சியால் இக்கோவில் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னம் ஆனது. பால்கோவாவிற்கு பிரசித்தி பெற்றது. போத்திஸ் நிறுவனம் முதன் முதலில் இங்கு தான் தொடங்கப்பற்றது.  108 திவ்ய தேசங்கள் எனப்படும் வைணவத்தலங்களில் இத்தலமும் ஓன்று. அது என்ன கணக்கு 108 ? விபத்து ஏற்ப்பட்டால் ஆண்டாளுக்கு அர்ச்சனை, ஆம்புலனசுக்கு அழைப்பு என்பதை நினைவு படுத்தவா? இங்குள்ள சாம்பல் நிற அணில் பூனை … Read more

வரலாற்றில் இன்று – ஜம்மு காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்த நாள் இன்று….!

 இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் 1947 ஆகஸ்ட் மாதம் இரு சுதந்திர நாடுகளான போதிலும் இரண்டுக்கும் இடையிலிருந்த மன்னர் ஹரி சிங்கின் ஆட்சியின் கீழிருந்த ஜம்மு காஷ்மீர் இரண்டு நாடுகளுடனும் சேர விருப்பம் தெரிவிக்காமல் சுயேச்சையான சமஸ்தானமாகவே இருந்துவந்தது. முஸ்லீம்கள் அதிகம் வாழும் ராஜ்ஜியம் என்பதைக் காரணம் காட்டி பாகிஸ்தான் அதனை தன்னுடன் இணையுமாறு வற்புறுத்தி வந்தது. அங்கிருந்த தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு கலகங்கள் மூட்டி வந்தது. குறிப்பாக பத்தான் பழங்குடிகள் மூலமாக கலவரங்களை … Read more

வரலாற்றில் இன்று பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டுவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது…!

வரலாற்றில் இன்று – அக்டோபர் 26, 1977 – பெரியம்மை நோய் உலகிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்த நோய் சோமாலியாவில் உள்ள ஒருவருக்கு கடைசியாக வந்ததாக அறியப்பட்டது. ஆயிரத்து எண்ணூறு வரை பெரியம்மை நோய் ஒரு கொடிய உயிர் கொல்லி நோயாகவும், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இருந்து வந்தது. முகம், கை, கால்களில் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அருவருப்பான தழும்புகளைப் பெற்றிருந்தனர். கண்களில் இந்நோய் வந்தால் பார்வை பறி போய்விடும் நிலையும் … Read more

இன்று உலகப் போலியோ தினம்….!

இளம்பிள்ளை வாதம் என்ற போலியோவுக்கு முதன்முறையாகத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த டாக்டர் ஜோனஸ் சால்க் அவர்களின் நினைவாக உலகப் போலியோ தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் போலியோ தடுப்பு மருந்தினால் 99% கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி ஏற்படும் 200 போலியோ தொற்றில் ஒன்று குணப்படுத்த முடியாத வாதத்திற்குக் கொண்டு செல்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் 5-10% பேருக்கு மூச்சு தசைகள் இயக்கம் இழப்பதால் மரணம் அடைகின்றனர். 1988-ல் … Read more

வரலாற்றில் இன்று-மருது சகோதரர்களும் அவர்களது குடும்பத்தாரும் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட நாள்

 அக்டோபர் 24, 1801. மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் கோபத்திற்கு ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் … Read more

வரலாற்றில் இன்று – அக்டோபர் 23, 1946 – ஐ.நா., சபையின் முதலாவது கூட்டத் தொடர் நியூயார்க்கில் துவங்கியது

வரலாற்றில் இன்று – அக்டோபர் 23, 1946 – ஐ.நா., சபையின் முதலாவது கூட்டத் தொடர் நியூயார்க்கில் துவங்கியது.. 1943 டிசம்பர் மாதத்தில் டெஹ்ரானில் நடைபெற்ற மாநாட்டில் அமெரிக்க குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சோவியத் அதிபர் ஸ்டாலின் முதலியவர்கள் கலந்துகொண்டு உலக ஜனநாயக நாடுகளின் கூட்டுறவுக்கு அழைப்பு விடுத்தனர். 1945 ஏப்ரலில் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோ நகரில் 58 நாடுகளின் பிரதிநிதிகள் கூடினர். 1945 ஜூன் 26ல் ஐ.நா. சபையின் சட்டதிட்டங்கள் … Read more

வரலாற்றில் இன்று – அக்டோபர் 23, 1917 – லெனின் அக்டோபர் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார்

போல்ஷெவிக் புரட்சி {Bolshevik revolution) எனவும் அறியப்படும் அக்டோபர் புரட்சி (October revolution), 1917ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் பெட்றோகிராட்டில் (தற்போது லெனின்கிராட்) ஏற்பட்ட ரஷ்ய பொதுவுடைமைக் கொள்கைப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும். இது கார்ல் மார்க்ஸின்கருத்துக்களின் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாவது பொதுவுடைமைப்புரட்சியாகும்.1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் பொதுவுடைமை புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது. அனைவருக்கும் … Read more

உலக வரலாற்றில் இன்று நோபல் பரிசை கொடுக்க காரணமான ஆல்பிரட் நோபல் பிறந்த தினம்…..!

அறிவியலாளர்கள் தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு வெல்ல நினைப்பது இந்த நோபல் பரிசை தான். அதனை ஏற்படுத்திய ஆல்பிரட் நோபல் பிறந்த தினம் தான் இன்று. அல்பிரட் நோபல் 1834ஆம் ஆண்டு அக் டோபர் 21ஆம் தேதி ஸ்டொக்ஹோம் நகரில் பிறந்தார். இவர் தன் கல்வியை ரஷ்யாவில் முடித்துவிட்டு அமெரிக்கா சென்று அங்கு எந்திரவியலில் சிறப்பு பயிற்சி பெற்றார். வெடிமருந்து உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதன் விளைவாக நைட்ரோ கிளிசரின் போன்ற வெடி மருந்துகளைப் பற்றிய … Read more

இன்று கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் நினைவு நாள்…?

இன்று முத்துசுவாமி தீட்சிதர் நினைவு நாள் – (அக்டோபர் 21, 1835) கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் பிறந்த ஊர் திருவாரூர். தமிழ் அந்தணர் குடும்பத்தில் பிறந்த இவர் சிறு வயதிலேயே பக்திமானாக விளங்கினார். சங்கீத மும்மூர்த்திகளில் மற்ற இருவர் பாடிய கீர்த்தனைகள் தெலுங்கில் உள்ளன. முத்துசாமி தீக்சிதரின் கீர்த்தனைகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் உள்ளன. 1835ம் ஆண்டு தீபாவளி நாளன்று காலை பூஜைகள் முடிந்தவுடன் தனது சீடர்களை “மீன லோசனி , பாச லோசனி” என்ற … Read more