அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! நடந்தது என்ன.? 

BJP State President Annamalai

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி காவல்நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதியை சீர்குலைக்கும் வண்ணம் நடந்துகொண்டதாக இளைஞர் ஒருவர் புகார் அளித்து உள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் “என் மண் என் மக்கள்” எனும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தர்மபுரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, கடந்த 8ஆம் தேதி பொம்மிடி அருகே பள்ளிப்படி எனும் ஊரில் உள்ள லூர்து அன்னை தேவாலயத்தின் உள்ளே … Read more

தமிழக அரசு முதலீடு இலக்குகளை அதிகப்படுத்த வேண்டும்- அண்ணாமலை..!

annamalai

சென்னை தி.நகரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி தலைமையற்ற பின் அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா முன்னேறியுள்ளது. உத்திரபிரதேசத்தில் உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ. 33.51 லட்சம் கோடி முதலீடு கிடைத்தது. உத்திரபிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளடக்கி முதலீடு பெறப்பட்டது.  2022-ல் கர்நாடகாவில் 9.82 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்த்தது. குஜராத்தில் முதலீட்டாளர் மாநாடு தொடங்குவதற்குள் ரூ. 7 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்த்துள்ளது. இவற்றை பார்க்கும்போது தமிழக அரசு … Read more

வெள்ள மீட்புப்பணிகள்.! மத்திய குழு கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது… அண்ணாமலை கடும் விமர்சனம்.! 

BJP State President Annamalai says about Chennai flood relief

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு சார்பில் நிவாரண உதவிகள் தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு மத்திய குழு தமிழகம் வந்து ஆய்வு செய்து தமிழக அரசு வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை நல்ல முறையில் மேற்கொண்டதாக குறிப்பிட்டனர். இதனை அண்மையில் ஒரு … Read more

இது மனித தவறு..! அமலாக்கத்துறையின் தவறு அல்ல – அண்ணாமலை

annamalai

மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி முதலில் ரூ.20 லட்சம் வாங்கிய நிலையில் மீதமுள்ள ரூ.31 லட்சத்தை வாங்கியபோது திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி சிக்கினார். இந்த நிலையில், 15 மணி நேர விசாரணைக்கு பின்  திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஜர்படுத்தியதையடுத்து, திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் … Read more

தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்? – அண்ணாமலை

annamalai

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை, கொளத்தூர், திரு.வி.க நகர் 15 செ.மீ.  மழையும், அம்பத்தூரில் 14 செ.மீ. மழையும் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மழை பாதிப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான … Read more

‘இவ்வளவுதானா..!’… தம்பியின் மான நஷ்ட வழக்கை பார்த்து ஓடி ஒளியவா போகிறேன்? – அமைச்சர் மனோ தங்கராஜ்

manothangaraj

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்திருந்த பேட்டியில், தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அகலபாதாளத்தில் உள்ளது. அமுல் இந்தியாவின் முன்மாதிரியான நிறுவனம், ஆவின் கைக்கூலிகளின் நிறுவனம். மனோஜ் தங்கராஜ் அமைச்சர் என்பதால் மரியாதை கொடுத்து பேசுகிறேன். மனோஜ் தங்கராஜ்  அரசியலில் இருப்பது தமிழகத்திற்கு சாபக்கேடு. என்னால் நாவடக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. அரசியல் கட்சிகளை பொறுத்தவரை அதிகமாக நல்லவர்கள் இருந்தால், நல்ல அரசியல். அதில், ஒருசில கெட்டவர்கள் இருந்தால் நீக்க வேண்டும் அல்லது ஒரு வாய்ப்பு வழங்க … Read more

அமுல் இந்தியாவின் முன்மாதிரி.! ஆவின் கைக்கூலி… அண்ணாமலை கடும் தாக்கு.!

annamalai

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பாலில், கொழுப்புசத்து அளவு குறைக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இதனை தொடர்ந்து, ஆவின் நிறுவனத்தின் பால் தரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், இதுதொடர்பாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் அளித்து இருந்தார். அவரது பதிலில், ஆவின் பால் பாக்கெட்டில் இருந்து இந்த ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை. ஆவின் பாலை குறை கூறிவிட்டு, வடமாநில பால் நிறுவனத்தை  தமிழகத்திற்கு கொண்டு வர … Read more

மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல.! அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி.!

BJP State President Annamalai - Tamilnadu Minister Mano Thangaraj

தமிழக அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்தின் பாலில் கொழுப்பு அளவு குறைக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்னர் குற்றம் சாட்டினார். மேலும், இதுகுறித்த ஆய்வறிக்கை என்றும் ஒரு பதிவை ததனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து ஆவின் பால் தரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இது குறித்து பதில்  அளித்து இருந்தார். ஆவின் பால் பாக்கெட்டில் … Read more

மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் வேண்டும்…பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்!

annamalai

2006 முதல் 2011 வரை கனிமவளத் துறை அமைச்சராக இருந்த அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடியும் அவரின் மகன் கெளதம சிகாமணியும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை … Read more

அண்ணாமலையுடன் கருத்து வேறுபாடு! அதிமுகவில் இணைந்த பாஜக முக்கிய நிர்வாகி!

ashok kumar

பாஜக மாநில ஓபிசி அணியின் மாநில துணை தலைவர் அசோக்குமார் அக்கட்சியில் இருந்து விலகி இன்று அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார். பாஜகவில் இருந்து விலகிய அசோக்குமார், மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகன் ஆவார். மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட திட்டமிட்டு அதற்கான பணிகளை அசோக்குமார் மேற்கொண்டு வந்தார். ஈரோடு தொகுதியை குறிவைத்து கடந்த 2 ஆண்டுகளாக கோடிக்கணக்கில் செலவழித்து வந்துள்ளார் ஆற்றல் அசோக்குமார். இந்த சூழலில் கடந்த … Read more