கோவையில் திமுக – பாஜக இடையே மோதல்! நடந்தது என்ன?

kovai

Election2024: கோவையில் அண்ணாமலை பரப்புரையின்போது திமுக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு. மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பாக ஈடுபட்டு வரும் நிலையில், கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் கோவை ஆவரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை பரப்புரையில் ஈடுபட்டபோது திமுக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, … Read more

அண்ணாமலையை ஓநாய் என்றால் அதை பாஜக ஏற்குமா? – அதிமுக

semmalai

AIADMK: எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு விமர்சித்திருந்தார். அதாவது, பிரதமர் மோடியின் ரோடு ஷோவை விமர்சித்திருந்த இபிஎஸ்-ஐ நரியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியிருந்தார். பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினால் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துவிட மாட்டார்கள், தமிழ்நாடு … Read more

தேர்தல் முடியட்டும்.. தமிழக உளவுத்துறை அதிகாரிகளுக்கு சிறை… அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

annamalai

Annamalai: தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தனது செல்போனை ஒட்டுக்கேட்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு. மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் தமிழகம் முழுவதும் அனல் பறக்க நடந்து வரும் நிலையில், கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த சுழலில் தனது செல்போனை தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஒட்டுக்கேட்பதாக பகிரங்கமான குற்றசாட்டை முன்வைத்துள்ளார் அண்ணாமலை. கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் … Read more

பிரதமர் நாட்டை விட்டு போவாரா? ஆ.ராசாவுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை!

annamalai

Annamalai: இந்தியாவிலேயே மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் தான் ஆ.ராசா என்று அண்ணாமலை விமர்சனம். கோவை மேட்டுப்பாளையத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதன்பின் இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை உறையற்றினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் பிறக்காத தமிழன் தான் பிரதமர் மோடி. ஜனநாயகத்தை பற்றி திமுக … Read more

கச்சத்தீவை பாஜக கையில் எடுக்க இதுவே காரணம்.! இலங்கை முன்னாள் தூதர் கருத்து.!

Kachatheevu Island - K Annamalai

Katchatheevu : தேர்தல் நேரம் என்பதால் 50 வருடத்துக்கு முன் முடிந்த பிரச்சனையை பாஜக கையில் எடுத்துள்ளது – இலங்கை முன்னாள் தூதர். அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கச்சத்தீவு விவகாரம் குறித்த தகவலை சேகரித்து அதனை பொதுவெளியில் தெரிவித்தார். அதில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் திமுக ஆட்சியும் இருந்த போது தான் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என குற்றம் சாட்டினார். இதனையே பிரதமர் மோடி மற்றும் … Read more

என் மீதான பயத்தால் என்னை ஆட்டுக்குட்டி என்கின்றனர் – அண்ணாமலை

annamalai

Annamalai: என் மீது பயம் இருப்பதால் என்னை ஆட்டுக்குட்டி என விமர்சனம் செய்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அத்தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அண்ணாமலை கூறியதாவது, … Read more

டாஸ்மாக் வேண்டாம்… கள் குடிக்கலாம்.! அண்ணாமலையின் புதிய வாக்குறுதி.!

BJP State President Annamalai

Election2024 : டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கள் கடைகளை திறக்க வேண்டும் என அண்ணாமலை பிரச்சாரம் செய்தார் . தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் இன்னும் மூன்று வாரத்தில் வர உள்ளதால், மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. தங்கள் கட்சி வாக்குறுதிகளை கூறுவது போல பிற கட்சிகளையும் சரமாரியாக அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து தங்கள் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கோவை மக்களவைத் தொகுதியின் பாஜக சார்பில் அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். … Read more

கட்சத்தீவை கேட்டால் தக்க பதில் அளிப்போம்… இலங்கை அமைச்சர் பரபரப்பு.!

Katchatheevu Island

Katchatheevu : கட்சத்தீவை தீவை இதுவரை இந்தியா திருப்பி கேட்கவில்லை என்று இலங்கை அமைச்சர் கூறியுள்ளார். இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்த கச்சதீவு கடந்த 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இது தொடர்பான தகவல்களை தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெற்று, அண்மையில் அதனை பகிர்ந்து இருந்தார். அதில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளாலே கச்சத்தீவு இலங்கைக்கு சென்றதாக குற்றம் சாட்டினார். மேலும், இது தொடர்பாக … Read more

பதில் சொல்லுங்க பிரதமரே… அடுக்கடுக்கான கேள்விகளுடன் முதல்வர்.!

PM Modi - Tamilnadu CM MK Stalin

MK Stalin : பிரதமர் மோடிக்கு 3 கேள்விகள் கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய கடல் எல்லை பகுதியில் இருந்த கட்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாக கூறி காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் மீது பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைக்கபெற்ற தகவல்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் … Read more

அண்ணாமலை, செல்வகணபதி வேட்புமனுக்கள் ஏற்பு.! அதிமுக பரபரப்பு புகார்.!

Selvaganapathy - K Annamalai

Election2024 : திமுக வேட்பாளர் செல்வகணபதி, பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு ஏற்பு சட்டவிரோதமானது என அதிமுக புகார். கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி  மற்றும் கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆகியோரின் வேட்புமனுக்கள் பல்வேறு பரபரப்புக்கு மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேற்கண்ட இருவரின் வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டது குறித்து அதிமுக குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். வேட்புமனுக்களை ஏற்றது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் கிறது … Read more