#NewCabinet:அமைச்சரான நடிகை ரோஜா – பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்!

ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.அப்போது,இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,அண்மையில் அமைச்சர்கள் சிலர் ராஜினாமா செய்தனர். இந்நிலையில்,ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடிகை ரோஜா உட்பட  25 அமைச்சர்கள் பதவியேற்றனர்.மாநில தலைநகர் அமராவதியில் உள்ள மாநில செயலகம் அருகே நடைபெற்ற பொது நிகழ்ச்சியில்,கவர்னர் பிஸ்வ பூசன் ஹரிசந்தன், … Read more

#BREAKING: ஆந்திர முதல்வர் தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா!

ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா. ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது. அனைத்து அமைச்சர்களும் முதல்வர் ஜெகன்மோகனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினர். அமைச்சரவை மாற்றியமைக்கும் வகையில் புதிய அமசகர்களின் பட்டியலை ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஆந்திராவில் முதல்வர் தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆட்சி அமைத்து அடுத்த மாதத்துடன் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற உள்ளன. இதனால் அமைச்சரவையை மாற்றியமைக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்திருந்தார். அதன்படி, … Read more

சித்தூரில் 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு, 45 பேர் காயம்!

ஆந்திர மாநிலம் சித்தூரில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 45 பேர் காயம். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், பகரபேட்டா காட் சாலையில் 52 பயணிகளுடன் சென்ற பேருந்து 50 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 44 பேர் காயமடைந்தனர். நேற்று இரவு 10:30 மணியளவில் பேருந்தில் பயணித்த பயணிகள் நகரிக்கு அருகில் உள்ள கிராமத்தில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்த போது இந்த … Read more

தேனிலவுக்காக வாடைகைகைக்கு விடப்பட்ட பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை – அதிர்ச்சியடைந்த நிர்வாகம்!

ஆந்திராவில் உள்ள பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையை முதலிரவுக்காக வாடைகைகைக்கு விடப்பட்டதை தொடர்ந்து மாநில அரசு அறிக்கை கேட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (JNTU-K) காக்கிநாடாவில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் உள்ள ஒரு அறையில் புதிதாக திருமணமான தம்பதியினர் முதலிரவு கொண்டாடுவற்காக வாடைகைகைக்கு விடப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் மகளிர் அதிகாரமளிப்புப் பிரிவின் இயக்குனர் ஸ்வர்ணகுமாரி என்பவர் பெயரில் புதுமண தம்பதியின் முதலிரவுக்காக வாடகைக்கு எடுத்துள்ளார். அன்றைய தினங்களில் அந்த அறை … Read more

ஆந்திராவில் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

ஆந்திராவின் ரேணிகுண்டா ரயில் நிலைய காவல்நிலையத்தில் தலைமை காவலர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை. ஆந்திராவின் ரேணிகுண்டா ரயில் நிலைய காவல்நிலையத்தில் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தலைமை காவலர் ஆனந்த் ராவ் அலுவலக ஸ்டார் ரூமில் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக நகர்புற போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 … Read more

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் – முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு. நாடு முழுவதும் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி என மத்திய அரசு அறிவித்த நிலையில், தமிழகம், கேரளா, அசாம், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்திருந்தன. அந்த வகையில், தற்போது ஆந்திர மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் … Read more

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் டோல் பூத் ஊழியரை அறையும் காட்சி வைரல்.!

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை ஆளும் தலைவர் டோல் பூத் ஊழியர்களை அச்சுறுத்தும் மற்றும் கன்னத்தில் அறைந்த காட்சிகளும் கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை, செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ ஒரு வீடியோவை வெளிட்டுள்ளது, அதில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள டோல் பூத்தை கடந்த செல்ல முயன்ற ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவரை டோல் பூத் ஊழியர் தடுத்து நிறுத்தி, அவரிடம் கட்டண வரி செலுத்தச் சொன்னபோது அவர் வரி செலுத்த மறுத்துவிட்டார். இதனால், தனது வாகனத்தின் முன் வைக்கப்பட்டிருந்த தடுப்பை ஒய்.எஸ்.ஆர்.சி.பி … Read more

ஆந்திராவில் ஏற்பட்ட மர்ம நோய் – காரணம் இது தானாம்!

ஆந்திராவில் ஏற்பட்ட மர்ம நோய்க்கான காரணம் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் நிக்கல் மற்றும் ஈயம் கலந்திருப்பது தான் என அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு எனும் கிராமத்தினர் திடீரென மயங்கி விழுவதாகவும், வித்தியாசமான சத்தங்களை போடுவதாகவும் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மர்ம நோய்க்கான கரணம் என்ன என தெரியாமல் மருத்துவர்கள் மற்றும் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். ஏற்கனவே கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், ஆந்திராவில் ஏற்பட்ட இந்த நோயால் … Read more

2K கிட்ஸின் அட்டகாசம்.!வகுப்பறையில் காதலிக்கு தாலிக்கட்டிய 11-ஆம் வகுப்பு மாணவன்.!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவன் வகுப்பில் வைத்து தனது காதலிக்கு தாலிக்கட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் அதே வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியை காதல் செய்துள்ளனர்.இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக இருவருக்கும் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் பள்ளிகள் திறந்ததை அடுத்து அந்த … Read more

இசைத்துறையின் சாதனையாளர் SPB-க்கு ஆந்திர அரசு செய்யும் கௌரவம்.!

இசைத்துறையின் மிகப் பெரும் சாதனையாளரான மறைந்த எஸ்பிபி அவர்களை கௌரவிக்கும் விதமாக அரசு இசைப்பள்ளிக்கு அவரது பெயரை வைக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா நோய் தொற்று காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் … Read more