செம்மரம் கடத்தல் – தமிழகத்தை சேர்ந்த 22 பேர் கைது!

Sandalwood smuggled

ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் கடத்த முயன்ற தமிழகத்தை சேர்ந்த 22 பேர் உட்பட மொத்தம் 25 பேரை அம்மாநில தடுப்பு பிரிவு காவல்துறை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் செம்மரங்கள் அதிகம் இருப்பதால், இதனை வெட்டி பல காலங்களாக கடத்தல் சம்பவம் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ஆந்திர மாநில அரசு, செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு ஒன்றை உருவாக்கி  செம்மரம் கடத்தலை தடுத்து வருகின்றனர். இந்த சமயத்தில் ஆந்திராவில் செம்பரம் கட்டை கடத்துவதாக தடுப்பு … Read more

ஆந்திராவில் 60 இடங்களில் என்ஐஏ சோதனை!

NIA Raid TN

ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, இடதுசாரி தீவிரவாதம் அல்லது நக்சல் வழக்கில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, திருப்பதி, கடப்பா, அனந்தப்பூர், குண்டூர், நெல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் நக்சலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் வழக்கறிஞர்கள், புரட்சி எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு இயக்க தலைவர்கள் வீடுகள், அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி … Read more

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் – ஆந்திர முதல்வர் அறிவிப்பு

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. நெல்லூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000ம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூரில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நடத்திய சாலை கண்காட்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு … Read more

கொரோனாவிற்கு பயந்து 2 வருடங்களாக வீட்டிற்குள்ளேயே தனிமையிலிருந்த தாயும், மகளும்.!

கொரோனாவிற்கு பயந்து 2 வருடங்களாக வீட்டிற்குள்ளேயே தாயும், மகளும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். ஆந்திராவில் உள்ள குய்யேறு கிராமத்தில் தாய்(43) மற்றும் மகள்(21) இருவரும் கடந்த இரு வருடங்களாக கொரோனா பயத்தால் வீட்டிற்குள்ளேயே தன்னைத்தானே தனிமைப் படுத்திகொண்டு வாழ்ந்திருக்கின்றனர். இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு பெருகிவந்த கொரோனா தொற்று காரணமாக முதல்முறையாக ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டது. கொரோனா பயம் மற்றும் பிற பதற்றம் காரணமாக இருவரும் 2020 முதல் வீட்டிற்குள் இருந்து 2 வருடங்களாக வெளியே வராமல் வாழ்ந்து … Read more

மாண்டஸ் புயல் பாதிப்பு.! திருப்பதி கோவில் வளாகத்தில் வெள்ளப்பெருக்கு..! தடைபட்ட தரிசனம்..!

திருப்பதி கோவில் வளாகத்தில் வெள்ளப் பெருக்கால் தண்ணீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். வங்கக்கடலில் புதிதாக உருவாகி தற்போது கரையை கடந்துள்ள மாண்டஸ் புயலின் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் (நேற்று) வெள்ளிக்கிழமை கனமழை பெய்துள்ளது. இதனால் கோவில் வளாகத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளப்பெருக்கால் கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள தண்ணீர் காரணமாக முதியவர்கள் உட்பட பக்தர்கள் தங்களது பயணங்களில் சிரமங்களை எதிர்கொண்டனர், மழையின் காரணமாக தரிசனம் தடைபட்டது. … Read more

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி கைது!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி, பாதயாத்திரையின் போது கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர்.டி.பி. நிறுவனருமான ஒய்.எஸ்.சர்மிளா தெலுங்கானாவில் பாதயாத்திரையின் போது கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது, ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி (ஒய்எஸ்ஆர்டிபி) தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா, இன்று டிஆர்எஸ் தொண்டர்களால் அவரது கேரவனை தாக்கி எரித்ததாக, கட்சி தொண்டர்கள் கூறியதையடுத்து வாரங்கல் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். வாரங்கல் மாவட்டத்தில் ஒய்.எஸ்.சர்மிளாவின் பாதயாத்திரையின் போது இந்த மோதல்கள் பதற்றத்தை ஏற்படுத்தியது. … Read more

டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களால் விலக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சக்திகள் – ஜெயக்குமார்

டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களால் விலக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சக்திகள் என ஜெயக்குமார் பேட்டி.  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நமது அம்மா நாளிதழில் முறைகேடு செய்ததால், ஒதுக்கி வைக்கப்பட்டவர்தான் மருது அழகுராஜ். அவர் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஓ.பி.எஸ் ஈடுபடுவது சரியல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களால் விலக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சக்திகள். இவங்கலாம் வேலைக்கு … Read more

அப்படிப்போடு…ஊழல் புகார் – புதிய செயலியை அறிமுகப்படுத்திய ஆந்திரா முதல்வர்!

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஊழல் தடுப்புப் பணியகத்தால்(ஏசிபி) உருவாக்கப்பட்ட ‘14400’ செயலியை(ACB mobile app 1440) மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளார்.அதன்படி,மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் தொடர்பான புகார்களைப் பதிவு செய்யவும்,முழு ஆதார ஆதாரங்களை நீதிமன்றத்தில் வழங்கவும் இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது.குறிப்பாக,ஊழல் தொடர்பான புகார் அளிக்க மக்களுக்கு உதவும் வகையில் இந்த அதிநவீன செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி,நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் புகார்களைப் பதிவு செய்வதற்கும் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்கும் ஏசிபி … Read more

#BREAKING: திருப்பதி – ஜூலை, ஆகஸ்ட் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டோக்கன் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக ரூ.300 மதிப்புள்ள டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது. தரிசன டிக்கெட் பதிவு செய்து பெற்ற பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும். தங்கும் அறைகளுக்கு … Read more

#JustNow: யார் யாருக்கு எந்தந்த துறைகள்? ரோஜாவுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு!

ஆந்திராவில் எம்எல்ஏ ரோஜாவுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் ஆட்சி அமைத்தது. அப்போது, இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். அதன்படி, ஆந்திராவில் மாற்றியமைக்கப்பட்ட முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் ரோஜா உள்பட 25 பேர் இன்று புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். அம்மாநில ஆளுநர் பிஸ்வ பூசன் ஹரிசந்தன், 25 அமைச்சரவை … Read more