பீஸ்ட் 80% சண்டை காட்சி நிறைந்த படமாக இருக்கும் – அன்பறிவு .!

பீஸ்ட் 80% சண்டை காட்சி நிறைந்த படமாக இருக்கும் என அன்பறிவு  தெரிவித்துள்ளனர்.  நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் இதுவரை வராத அளவுக்கு ஒரு டார்க் ஆக்‌ஷன் காமெடி திரைப்படமாக பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்கும் … Read more

விக்ரம் படத்தில் இணைந்த பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள்..!!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் பிரபல ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பறிவ் இணைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் மாநகரம் , கைதி, மாஸ்டர் என மூன்று வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் . ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்திற்கான … Read more

விஷ்ணு விஷால் படத்திலும் ‘தளபதி 65’ பிரபலங்களா.? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன்தாஸ் படத்தில் ஸ்டண்ட் கலைஞர்களான அன்பறிவ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் காடன், எப்.ஐ.ஆர், ஜெகஜ்ஜால கில்லாடி மற்றும் மோகன்தாஸ் ஆகிய 4 படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் .இதில் காடன் மற்றும் எப்.ஐ.ஆர் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.அதிலும் ராணாவுடன் விஷ்ணு விஷால் நடித்துள்ள காடன் திரைப்படம் மார்ச் 26-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் … Read more

அடுத்த வருஷம் “தளபதி 65” பற்றி தான் பேசுவீங்க…கே ஜி எஃப் ஸ்டண்ட் மாஸ்டர்..!

ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் அடுத்த வருடம் நீங்கள் கேஜிஎஃப் ஸ்டண்ட் காட்சிகளை மறந்து விடுவீர்கள் என்றும் தளபதி 65 சண்டைக் காட்சிகள் மட்டுமே பேசுவீர்கள் என்று கூறியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மார்ச் மாதம் … Read more

தளபதி-65ல் இணையும் இரட்டையர்கள்.!

தளபதி 65-ல் தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் என்ற இரட்டையர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரது அடுத்த படம் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தளபதி 65 படத்தை முருகதாஸ் அவர்கள் இயக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதனை அதிகாரப்பூர்வமாக்குவதற்கான அனைத்து ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளதாக … Read more