அமமுகவில் இருந்து திமுக சென்றவர்களுக்கு முக்கிய பதவிகள்! திமுக தலைமை அதிரடி அறிவிப்பு

அமமுகவில் இருந்து திமுக சென்றவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ  வி.பி.கலைராஜன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்  பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.  இதனையடுத்து  ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை இணைத்து கொண்டார். இதேபோல் செந்தில் பாலாஜியும் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். தினகரனுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தனது தொண்டர்களுடன் திமுகவில் இணைந்தார் தங்கத்தமிழ்செல்வன். ’தலைமைக் கழக அறிவிப்பு’ கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் … Read more

திமுகவும் அதிமுகவும் உபா சட்டத்திற்கு துணை நின்றது கண்டனத்திற்குரியது! டி.டி.வி.தினகரன் காட்டம்!

சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசானது, உபா சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் மூலம் நாட்டிற்கு எதிராக செயல்படும் தனி நபர் மீதும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை எடுக்க முடியும் விசாரணை நடைபெறும் போது குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்துக்களை முடக்க முடியும் என சட்டம் கொண்டுவரப்பட்டது.  இந்த சட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் ஆளுங்கட்சி இச்சட்டத்தை நிறைவேற்றியது. இது குறித்து,  அமமுக தலைவர் டிடிவி.தினகரன் தனது இணையதள பக்கத்தில், ‘சிறுபான்மையினரின் காவலர்கள்’ என்று … Read more

வேலூர் தேர்தலில் அமமுக ஆதரவு யாருக்கு – டிடிவி தினகரன் பதில்!

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் அமமுக கட்சியின் ஆதரவு யாருக்கும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடந்த கூட்டத்தில் இன்று பேசிய அவர், அமமுக கட்சியாக பதிவு செய்த பின்பே இனி வரும் தேர்தலில் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தற்போது நடக்கும் வேலூர் தொகுதி தேர்தலில் அமமுக ஆதரவு யாருக்கும் இல்லை என்றும் கூறி இருக்கிறார். அதிமுக அமைச்சர்கள் பலர் தங்கள் கட்சியை சார்ந்த பலரை இழுத்து ஆள் பிடிக்கும் … Read more

குறைகளை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய சிறப்புக்குழு ஒன்றை அமைத்திட வேண்டும்-முதலமைச்சர் பழனிசாமிக்கு தினகரன் கோரிக்கை

முதலமைச்சர் பழனிசாமிக்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.அதில், தமிழ்மொழியின் தொன்மை குறித்த தவறான தகவலை போல பாடப்புத்தகங்களில் இருக்கும். குறைகளை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய சிறப்புக்குழு ஒன்றை அமைத்திட வேண்டும். அரசு தயாரித்திருக்கின்ற பாடப்புத்தகங்கள் அனைத்தையும் மீளாய்வு செய்து குறைகளைக் கண்டறிந்து சரி செய்வதற்கான ஏற்பாட்டினை செய்திட வேண்டும். மேலும் இப்படி பட்டவர்த்தனமாக வரலாற்றைத் திரித்து பாடங்களைத் தயாரித்தவர்கள், இனிமேல் அரசு சார்ந்த எந்த குழுக்களிலும் இடம்பெறுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவிதித்துள்ளார்.

தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு! விசாரிப்பதிலிருந்து விலகிய நீதிபதி

ஜெயலலிதா மறைவிற்கு பின்  இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் எடப்பாடி பழனிச்சாமி -ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் டிடிவி தினகரன் அணிக்கு இடையே கடும்  போட்டி நிலவியது. இதன் பின்னர்  தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகாரில் தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார் தினகரன். தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற … Read more

வேலூர் மக்களவை தேர்தல் : சுயேச்சைக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதன் பின்னர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூரில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.வேலூர் தொகுதியில் 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல்  வெளியிடப்பட்டது. ஆனால்  தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசு பெட்டகம் சின்னத்தை ஒதுக்கியது.அதேபோல்   4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் அமமுகவுக்கு பரிசு பெட்டகம்  … Read more

அதிகாரங்களை ஒற்றைப்புள்ளியில் குவிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகிவிடும்-தினகரன்

ஆர்.டி.ஐ  சட்டத் திருத்த மசோதா தொடர்பாக  அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,  ஆர்.டி.ஐ. சட்டத்திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப்போகச் செய்யும்.அரசுக்கும் சாமானியர்களுக்கு பாலமாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் இருந்தது. ஆனால்  தன்னாட்சி அமைப்பை மத்திய அரசு தனது அதிகாரத்துக்குள் கொண்டுவர முயற்சிப்பது சரியல்ல. அதிகாரங்களை ஒற்றைப்புள்ளியில் குவிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகிவிடும். ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற விடாமல் எதிர்க்கட்சிகள் தடுக்க வேண்டும் என்று  தினகரன் தெரிவித்துள்ளார்.

பின்வாங்கிய தினகரன்,கமல்ஹாசன் !வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியில்லை

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின்  பொதுச்செயலாளர் அருணாச்சலம் கூறுகையில்,வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை. அடுத்த சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். மக்களின் நம்பிக்கையின்மையை காப்பது மிகமுக்கியம் என்பதால் அதில் முழுக்கவனம் செலுத்தஇருக்கிறோம்  என்று தெரிவித்தார். ஏற்கனவே வேலூர் மக்களவை தேர்தலில் … Read more

சொந்த காரணத்திற்காக சுயநலத்தோடு சென்றவர்களை எங்களால் தடுக்க முடியாது-தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் ,அமமுக மாபெரும் சக்தி. சசிகலாவை வெளியில் எடுக்க சட்டரீதியான முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம், நிச்சயம் வெளியே வருவார். சொந்த காரணத்திற்காக சுயநலத்தோடு சென்றவர்களை எங்களால் தடுக்க முடியாது.உண்மையான தொண்டர்கள், உண்மையான நிர்வாகிகள் எங்களோடு தொடர்ந்து பயணிப்பார்கள் என்று கூறினார்.

அம்மா மருந்தகங்கள் அடுத்தடுத்து மூடப்படுவதாக வெளியான செய்தி வேதனை அளிக்கிறது-தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் ,ஜெயலலிதா தொடங்கிய அம்மா மருந்தகங்கள் அடுத்தடுத்து மூடப்படுவதாக வெளியான செய்தி வேதனை அளிக்கிறது. கூட்டுறவு துறை அதிகாரிகளின் அலட்சிய நிர்வாகத்தால் அம்மா மருந்தகங்கள் மூடப்பட்டு வருகின்றது . மூடப்பட்ட மருந்தகங்கள் மீண்டும் செயல்பட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.