கொரோனாவுக்கும் பயம், பேரக்குழந்தை மீதும் பாசம் – இணையத்தை கலக்கும் புகைப்படம்!

கொரோனாவால் தங்கள் பேரக்குழந்தைகளை கண்ணாடி வழியாக பார்க்கும் தாத்தா-பட்டி மற்றும் அவர்களின் நாய் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  கொரோனா வைரஸ் தொற்று தங்களுக்கு வந்தவர்களிடம் கூட இல்லாத அச்சம் வராதவர்களிடம் முன்னெச்சரிக்கையாகவே இருக்கிறது. அதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் முன்னணி நாடக விளங்க கூடிய அமெரிக்காவில் இது குறித்த விழிப்புணர்வுடன் மக்கள் செயல்பட்டு வருகின்றனர். முக்கியமாக குழந்தைகளை கவனித்து கொள்வதில் மிக அக்கறை காட்டுகின்றனர். அது போல தற்பொழுது அமெரிக்காவில் உள்ள ஒரு … Read more

அதிபர் டிரம்ப்பை கடவுளாக வழிபட்ட தெலுங்கானாவை சேர்ந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

அதிபர் டிரம்ப்பை கடவுளாக வழிபட்ட தெலுங்கானாவை சேர்ந்தவர் மாரடைப்பால் உயிரிந்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் தீவிர ரசிகர் எனக்கூறி தெலுங்கானாவை சேர்ந்த புஸ்ஸா கிருஷ்ணன் என்பவர் அவரை கடவுளாக சிலை வைத்து தினமும் பூஜித்து வந்தார். இவரது செயல் மிகவும் உலகெங்கிலும் வைரலாகி வந்த நிலையில், தற்போது அமெரிக்க அதிபரும் அவரது மனைவிக்கும் கொரோனா என்ற செய்தி அறிந்ததிலிருந்து புஸ்ஸா கிருஷ்ணா அவர்கள் மிகவும் சோர்வடைந்து இருந்துள்ளார். இந்நிலையில் சரியான நேரத்தில் உணவு சாப்பிடுவதையும் … Read more

குழாய் நீரை இனி கழிவறைக்கு மட்டும் உபயோகப்படுத்துங்கள் – அமெரிக்கா எச்சரிக்கை!

குழாய் நீரை இனி கழிவறைக்கு மட்டும் உபயோகப்படுத்துங்கள் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. குழாய் நீரில் உயிரை கொல்லக்கூடிய அமீபா இருப்பதால், பொது நீர் வினியோகம் மூலம் மக்களுக்கு அளிக்கப்படும் நீரையும் குழாய் நீரையும் அப்படியே குடிக்க வேண்டாம் என அமெரிக்க அரசு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்கா டெக்ஸாஸில் உள்ள 8 நகரங்களில் சுற்றுச்சூழல் தரம் குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆலோசனையில், குழாய் நீரில் இருந்து வரக்கூடிய தண்ணீரில்  நைக்லீரியா ஃபோலெரி மூளை உண்ணக்கூடிய அமீபா … Read more

15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை!

கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை என நியூயார்க் டைம்ஸ் செய்தியில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என செய்திகள் வெளியாகி உள்ளது. அவர் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம் மற்றும் பிற உலக ஒப்பந்தங்களிலிருந்து கடந்த 2018 ஆம் ஆண்டுக்குள் 7427.4 மில்லியன் டாலர் வருமானத்தை பெற்று உள்ளார். இருந்த போதிலும் கடந்த 15 ஆண்டுகளில் … Read more

ஐநா சபையின் 75 வது ஆண்டு விழாவுக்கு நேரில் செல்ல மறுத்த அமெரிக்க அதிபர்!

ஐநா சபையின் 75 வது ஆண்டு விழாவுக்கு நேரில் செல்ல அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். ஐநா சபையின் 75-வது ஆண்டு தினத்தை நினைவு கூறக்கூடிய பொது சபை கூட்டம் இன்று துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் ஐநா பொதுச்செயலாளர், தலைவர் ஆகியோர் நேரில் பங்கேற்றுள்ளனர். ஆனால் உலக தலைவர்கள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, மாறாக காணொளிக்காட்சி வழியாக உரையாற்றி அவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ரொனால்ட்  … Read more

அமெரிக்காவை தாக்கிய லாரா புயல் – 160 ஆண்டுகளில் இல்லாத புயல்!

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தை தாக்கிய லாரா புயல். அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் கேமரான் என்ற இடத்தின் அருகே 150 மைல் வேகத்தில் லாரா எனும் புயல் கரையை கடந்த போது பலத்த காற்று வீசியதால் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்துள்ளது.  கடந்த 160 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு புயல் அப்பகுதியை இதுவரை தாக்கியதில்லையாம். இதனால் ஆயிரக்கணக்கான வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா தாக்கம் அச்சம் உள்ளவர்கள் ஹோட்டல் அறைகளில் தங்க … Read more

அமெரிக்காவில் இறுதிச்சடங்கு வீட்டுக்கு வெளியில் நடந்த துப்பாக்கி சூடு – 14 பேர் படுகாயம்!

சிகாகோவில் நடந்த இருத்திசடங்கு வீட்டின் அருகில் நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் படுகாயம். அமெரிக்காவிலுள்ள மாநகரங்களில் ஒன்றான சிகாகோவில் இறுதிச்சடங்கு ஒன்று நடைபெற்றுள்ளது. அப்பொழுது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த மர்ம நபர்கள் மூலமாக வெடித்த துப்பாக்கி குண்டுகளால் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட 14 பேர் காயமடைந்துள்ளனர். உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில், இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார்? என்பது குறித்து தீவிரமாக சிகாகோ போலீசார் தேடுதல் வேட்டையில் … Read more

அமெரிக்காவின் முதல் கொரோனா தடுப்பூசி – எதிர்பார்த்த வெற்றி கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தகவல்!

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி நல்ல நோயெதிர்ப்பாற்றலை கொடுத்துள்ளது என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அதிகம் உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை சந்தித்துள்ள நாடுகளில் முக்கியமானது அமெரிக்கா தான். இங்கு பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள 30,000 பேரை கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்ட கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி நல்ல நோயெதிர்ப்பாற்றலை வழங்கப்பட்டவர்களுக்கு கொடுத்துள்ளது என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் … Read more

மாஸ்க் விவகாரத்தில் ஒருவரை கொலை செய்தவர் ஷெரீப் துணையாளரால் சுட்டு கொலை!

மாஸ்க் அணியவில்லை என்று இருவருக்குள் வந்த விவகாரத்தில் ஒருவரை குற்றியதாக சந்தேகிக்கப்படும் நபரை ஷெரீப்பின் துணை ஒருவர் சுட்டு கொன்றுள்ளார் என போலீசார் கூறியுள்ளனர். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், அமெரிக்காவில் தான் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகமாக உள்ளது. இருந்த போதிலும் அமெரிக்காவின் பெரிய நகரங்களில் ஒன்றாகிய மிச்சிகனில் உள்ள டெட்ராய்ட் பகுதியிலுள்ள ஒரு கடைக்குள் மாஸ்க் அணியவில்லை என்று வந்த பிரச்சனையால் ஒருவர் மற்றொருவரை … Read more

டொனால்டு ட்ரம்ப் மீது வழக்கு பதிவு – மாணவர் விசா சர்ச்சையால் MIT, ஹார்வர்ட் அதிரடி!

மாணவர்களுக்கான விசா மறுப்பு சர்ச்சையில் அமெரிக்காவின் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது MIT மற்றும் ஹார்வர்ட் ஆகிய நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அமரிக்காவிலும் பல லட்சக்கணக்கான மக்கள் இதற்கு இரையாகி வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அகற்றுவது தொடர்பாக பல சர்ச்சைகள் அமரிக்காவில் எழுந்து வருகின்றது. இந்நிலையில், பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்கும்படியும், பிற  நலன் கருதிய எச்சரிப்புகளை மீறியும் அன்மையில் அமெரிக்க அதிபர் … Read more