அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 7 வயது சிறுமி உயிரிழப்பு!

அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட் என்னுமிடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 வயது சிறுமி உயிரிழந்ததுடன், அவரது தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட் எனும் இடத்தில் ஜோண்டே ஆடம்ஸ் எனும் 28 வயது நபர் அவரது ஏழு வயது மகள் ஜாஸ்மின் ஆடம்ஸ் உடன் தங்கள் காரின் அருகில் நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஜேண்டே ஆடம்ஸின் 7 வயது மகள் ஜாஸ்மின் … Read more

வீட்டிலிருந்து வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு – அமெரிக்க அரசு!

கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக வீட்டில் இருந்தே முதியவர்கள் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்ளக் கூடிய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அமெரிக்க அரசு விடுமுறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தற்பொழுதும் குறையாமல் அமெரிக்காவில் பரவிக் கொண்டே இருக்கும் நிலையில், வீட்டிலிருந்தே முன்னெச்சரிக்கை காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்களை கவனித்துக் கொள்ளக் கூடிய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு நிதியை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. ஜோ பைடன் அவர்களின் ஆட்சி தற்போது அமெரிக்காவில் நடந்து … Read more

முதல் பெண் துணை அதிபர் கமலா ஹரிஸை கொண்டாடும் விதமாக லிங்கன் நினைவகத்தில் கண்ணாடி உருவப்படம்!

அமெரிக்காவில் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு லிங்கன் நினைவகத்தில் கண்ணாடி உருவப்படம் கொண்ட ஒன்றை தேசிய மகளிர் வரலாற்று அருங்காட்சியகம் நிறுவியுள்ளது. விறுவிறுப்பாக கடந்த வருடம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்தி ஜோ பைடன் வெற்றிபெற்ற நிலையில், துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹரிஸுக்கு அமெரிக்காவிலும் சரி பிற நாடுகளிலிருந்தும் சரி நல்ல வரவேற்பு … Read more

கருப்பின சிறுமி மீது பெப்பர் ஸ்பிரே அடித்த போலீசார் – அமெரிக்காவில் வலுக்கும் கண்டனம்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கருப்பின சிறுமி ஒருவர் மீது போலீசார் பெப்பர் ஸ்பிரே அடித்த சம்பவம் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே கருப்பர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் 9 வயது மட்டுமே ஆகக் கூடிய கருப்பின சிறுமி ஒருவர் தன்னுடைய தாயை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கம் கொண்டிருந்ததாக போலீசார் கடுமையாக அச்சிறுமியை தாக்கியுள்ளனர். மேலும், அச்சிறுமியை கீழே … Read more

வர்ஜீனியாவில் கைத்துப்பாக்கி மற்றும் 20 சுற்று வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது!

வர்ஜீனியாவில் கைத்துப்பாக்கி மற்றும் 20 சுற்று வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.  அமெரிக்காவில் உள்ள வர்ஜினியா தெற்கு சார்லஸ்டனைச் சேர்ந்த வாரன் வெஸ்டோவர் எனும் 71 வயதுடைய முதியவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைத்துப்பாக்கி மற்றும் 20 சுற்று வெடி மருந்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டவிரோதமாக பதிவு செய்யப்படாத துப்பாக்கியை வைத்திருந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் இவரை ஆஜர்படுத்தியுள்ள போலீசார், சட்டவிரோதமாக துப்பாக்கியை இவர் வைத்திருந்ததும், அவரது காரில் 20 சுற்று வெடிமருந்துகள் … Read more

கொரோனாவுக்கு பயந்து அமெரிக்க விமான நிலையத்தில் மூன்று மாதங்கள் பதுங்கி வாழ்ந்த இந்தியர் கைது!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து அமெரிக்காவில் உள்ள விமான நிலையத்தில் தங்கியிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் காவல்துறையினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒரு வருட காலமாக உலகமே நடுங்கி போயிருக்கிறது. பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், கோடிக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு தற்போது வரையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கான மருந்துகள் கண்டறியப்பட்டுளளது என பல இடங்களில் அனுமதிக்கப்பட்டு வந்தாலும், இந்த மருந்துகள் மூலமாகவும் சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது. … Read more

கொரோனா பரவல் காரணமாக கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவில் தள்ளிவைப்பு!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவில் ஜனவரி மாதம் நடைபெறவிருந்த கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கக்கூடிய கலைஞர்களுக்கு கிராமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறக்கூடிய இந்த விழாவில் இசைத் துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதே போல … Read more

ஜனவரி 20 க்கு பின் அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்ற பாடுபடுவோம் -கமலா ஹாரிஸ்!

ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்பதாக அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றியமைக்க பாடுபடுவோம் என அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் அவர்கள் கூறியுள்ளார். அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், துணை அதிபராக கமலாஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில், கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். … Read more

பூமியின் தன்மையை அறிவதற்காக வேற்றுகிரக வாசிகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் – முன்னாள் இஸ்ரேல் பாதுகாப்பு தலைவர்!

பூமியின் தன்மையை குறித்து அறிவதற்காக வேற்றுகிரக வாசிகள், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக முன்னாள் இஸ்ரேல் பாதுகாப்பு தலைவர் சர்ச்சைக்குள்ளான கருத்தை தெரிவித்துள்ளார். பூமியை சார்ந்திராமல் வேற்று கிரகங்களில் வசிப்பதாக கூறப்படக்கூடிய ஏலியன்ஸ்கள் உண்மையில் இருக்கிறார்களா என்பது குறித்து பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டாலும், இந்நாள் வரையில் அதுகுறித்த தெளிவான உண்மைகள் அறியப்படாமலே உள்ளது. இதனால் ஏலியன்ஸ் என்பது, கற்பனையான ஒன்றாகவே மனிதர்களால் நம்பப்படுகிறது. இந்நிலையில் வேற்றுகிரக வாசிகளான ஏலியன்ஸ் குறித்து இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு தலைமை அதிகாரியாக இருந்த … Read more

நம்பகத்தன்மையை உணர்த்த மக்கள் முன்னிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்வேன் – ஜோ பைடன்!

கொரோனா தடுப்பூசி குறித்த நம்பகத்தன்மையை பொது மக்களுக்கு உணர்த்தும் வகையில் மக்கள் அனைவர் முன்னிலையிலும் வைத்து தான் தடுப்பூசி செலுத்தி கொள்ளப்போவதாக ஜோ பைடன் அவர்கள் கூறியுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் ஜனவரி மாதம் பதவி இவர் ஏற்கவுள்ள நிலையில், முதன்முறையாக தற்பொழுது ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்பொழுது … Read more