தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம்,தென் தமிழகத்தில் இடியுடன் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக  தெரிவித்துள்ளது. தெற்கு உள் கர்நாடகாவில் இருந்து உள் தமிழகம் வழியாக தென் தமிழகம் வரை காற்றில் வேக மாறுபாடு நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென் தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் … Read more

சட்டப்பேரவை முன்பு காங். தர்ணா!முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங். தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா!

எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து  கர்நாடக சட்டப்பேரவை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங்.  தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் சித்தராமையா தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பெரும்பான்மையில்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூரு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் … Read more

டெல்லியில் அதிகாலையில் திடீரென வீசிய புழுதிப்புயலால், ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தது!

டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று அதிகாலையில் திடீரென வீசிய புழுதிப்புயலால், ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளை சில நாட்களுக்கு முன்பு இடியுடன் கூடிய கனமழையும், புழுதிப்புயலும் தாக்கியது. இதில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்ததுடன், மின்கம்பங்களும் சேதமடைந்தன. சீரமைப்பு பணிகளைத் தொடர்ந்து, இயல்பு நிலை திரும்பிய நிலையில்,நேற்று அதிகாலையில் மீண்டும் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் புழுதிப்புயல் வீசியது. திடீரென வீசிய புழுதிப்புயலால் … Read more

தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டுதான் என்பதை உணர வேண்டும்! மு.க.ஸ்டாலின்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,பிளஸ்டூ தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நம்பிக்கையிழக்காமல் கடினமாக உழைத்து உயர்கல்விப் பாதையில் ஊக்கத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் கிஞ்சிற்றும் நம்பிக்கையிழக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளார். தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டுதான் என்பதை உணர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அடுத்து வரும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, மேலும் கடினமாக உழைத்து, வெற்றிபெற்று உயர்கல்வி பெறும் பாதையில் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பயணிக்க வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார். … Read more

எடியூரப்பா ஆட்சியமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் மோடியின் உருவ படம் எரிப்பு..!

கர்நாடகத்தில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததை கண்டித்து, நள்ளிரவில் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடியின் உருவ படங்களை எரித்து முழக்கங்களை எழுப்பினர்

உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி கே.எம். ஜோசப்பை பரிந்துரை செய்யும் முடிவை கொலீஜியம் ஒத்தி வைப்பு..!

நீதிபதி கே.எம். ஜோசப்பை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்ய மீண்டும் பரிந்துரைக்கும் முடிவை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் குழு ஒத்தி வைத்துள்ளது.நீதிபதி கே.எம். ஜோசப்பின் பதவி உயர்வு பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை அடுத்து உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் கூட்டம் கூட்டப்பட்டது. இதில் பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் மீண்டும் ஜோசப்பின் பெயரை மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆயினும் ஜோசப்பின் பெயரை பரிந்துரைத்தால் மத்திய அரசுடன் நீதித்துறையின் மோதல் மேலும் அதிகரிக்கும் நிலை உருவானது. … Read more

ஆம் ஆத்மி கட்சிக்கு கர்நாடகத் தேர்தலில் டெபாசிட் காலி!

ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 28 பேரும்  கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நிலையில்  டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர். கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு நடைபெற்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியினர் 28 தொகுதிகளில் போட்டியிட்டனர். அவர்கள், பஞ்சாப் மாநிலத் தேர்தலைப் போல, மிகப்பெரிய அளவில் கர்நாடகத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிவந்த நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், ஆம் ஆத்மி வேட்பாளர்கள் ஒருவர் கூட டெபாசிட் வாங்காமல், படுதோல்வியை சந்தித்துள்ளனர். … Read more

கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா!ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்!

கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா. கர்நாடகா மாநில முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பாஜகவின் எடியூரப்பா 3 வது முறையாக கர்நாடக முதலமைச்சராகியுள்ளார் எடியூரப்பா.ஆனால் கர்நாடகத்தில் எடியூரப்பாவுடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இந்நிலையில்  கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று மத்திய அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். இதேபோல்  பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கர்நாடக … Read more

பழநி கோவில் ஐம்பொன் சிலை முறைகேடு வழக்கு! விசாரணைக்கு அழைக்கப்பட்ட தண்டாயுதபாணி தலைமறைவு!

இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர்,பழநி கோவில் ஐம்பொன் சிலை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில்   தலைமறைவாகியுள்ளார். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் புதிய ஐம்பொன் சிலை செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக தங்கம் பயன்படுத்தப்பட்டதாகவும், அந்த தங்கத்தில் முறைகேடு நடைபெற்றதாகவும் கூறப்பட்ட புகாரில்,  தலைமை ஸ்தபதி முத்தையா, இணை ஆணையர் கே.கே.ராஜா ஆகியோர் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ளனர். இந்த வழக்கில் திருத்தணி … Read more

கும்பகோணத்தில் கேஸ் சிலிண்டரை மனைவி தலையில் போட்டுக் கொலை செய்த கணவன்!

மனைவியின் தலையில் கேஸ் சிலிண்டரை போட்டுக் கொடூரமாகக் கொலை செய்த கணவன் கும்பகோணத்தில்  காவல் நிலையத்தில் சரணடைந்தார். கும்பகோணம் சாக்கோட்டை மெயின் சாலையைச் சேர்ந்தவர் பஷீர் அகமது. இவருக்கும் இவரது மனைவி பாத்திமாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை பாத்திமா தூங்கிக் கொண்டிருந்த போது, பஷீர் அகமது அவரது தலையில் கேஸ்சிலிண்டரை போட்டு கொலை செய்துள்ளார். மேலும் மனைவியைக் கொலை செய்ததாக பஷீர் அகமது நாச்சியார்கோவில் காவல் நிலையத்திலும் சரணடைந்தார். இதையடுத்து … Read more