தற்போது வரை வேட்புமனு தாக்கல் செய்த நட்சத்திர வேட்பாளர்கள்!

nomination

Election2024 : தற்போது வரையில் தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த நட்சத்திர வேட்பாளர்கள் விவரங்களை இதில் காணலம். தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி மக்களவை தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி மார்ச் 28 என்பதால் இன்னும் 2 நாட்களே உள்ளதால் பலரும் மும்முரமாக தங்கள் வேட்புமனுக்களை … Read more

வேட்புமனு தாக்கலில் வெடித்த சர்ச்சை.! திமுக – அதிமுக இடையே கடும் வாக்குவாதம்.!

DMK vs ADMK

DMK-ADMK : வடசென்னை மக்களவை தொகுதியில் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக திமுக  அதிமுகவினர் இடையே வாக்குவாதம். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே (மார்ச் 28 கடைசி நாள்) உள்ள நிலையில், இன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர். வடசென்னை மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோரும் … Read more

ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு… ஆனா இதற்கு தடையில்லை – ஐகோர்ட்

o panneerselvam

OPS: இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் மாற்றம் லெட்டர் பேடு ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தடை விதித்திருந்தார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், தனி நீதிபதி விதித்த தடையை விலக்க வேண்டும் என்றும் இரட்டை இலை சின்னம், அதிமுக கொடியை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் … Read more

பக்தி மயமான அதிமுக… பிரச்சாரம் முதல் வேட்புமனு தாக்கல் வரையில் நல்ல நேரம் தான்….

ADMK Chief Secratary Edappadi Palanisamy

Election2024 : இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அதிமுக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். வரும் மக்களவை தேர்தலை தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சியான அதிமுக இறைபக்தியுடன் எதிர்கொண்டு வருகிறது. ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கிய அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டத்தில் சென்றாய பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் . வழக்கமாகவே தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கும் முன்னர் சேலம் மாவட்டம் … Read more

ஒரே நேரத்தில் 33 அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்

AIADMK: அதிமுக வேட்பாளர்கள் நாளை ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 27ஆம் தேதி கடைசி நாளாகும். Read More – சூர்யவம்சம் படம் போல ராதிகாவை எம்.பி. ஆக்குவேன்: சரத்குமார் ஒவ்வொரு … Read more

நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம்.!

Jansi Rani - Simla Muthuchozhan

Election2024 : நெல்லை அதிமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சியாக உள்ள அதிமுக அண்மையில் அதன் வேட்பாளர்களை அறிவித்தது. மொத்தம் 33 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். அதில் திருநெல்வேலி தொகுதியில் சிம்லா முத்துசோழன் எனும் பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவர் சில மாதங்களுக்கு முன்னர் தான் மாற்று கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்தார். மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக … Read more

திமுக vs அதிமுக தான்.. பாஜக ஒண்ணுமேயில்லை.. எஸ்.பி.வேலுமணி அதிரடி.!

BJP State Leader Annamalai - ADMK Ex Minister SP Velumani

Election2024 : கோவையில் போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் செய்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாத காலதிற்குள் காலஅவகாசம் உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்ற தொகுதியான கோவையில் இந்த முறை திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படாமல் திமுகவே நேரடியாக களமிறங்கியதற்கு காரணம் என்னவென்று பலரும் யோசிக்கவே, தாடாலடியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை … Read more

பாமக கூட்டணி வைக்காத கட்சிகளே இங்கு இல்லை.. இபிஎஸ் கடும் விமர்சனம்.!

Edappadi Palanisamy - Dr Ramadoss - PM Modi

Election2024 : தமிழகத்தில் பாமக கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக கட்சிக்கு பாஜக, அதிமுக என இரு தரப்பில் இருந்தும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதிமுக தரப்பில் 7 தொகுதிகள் ஒதுக்கவும், பாஜக தரப்பில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இறுதியில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக சேர்ந்தது. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. … Read more

விருதுநகரில் களமிறங்கும் விஜயகாந்த் மகன்.. தேமுதிக வேட்பாளர் லிஸ்ட்….

vijaya prabakaran

Elections2024  வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கும் தேமுதிக கட்சிக்கு ஐந்து மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன இதற்கான வேட்பாளர் பட்டியலை தற்போது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டு உள்ளார். read more- பாஜக வேட்பாளராக ராதிகா, ஜான் பாண்டியன்.. வெளியான அடுத்த லிஸ்ட்… அதன்படி விருதுநகரில் விஜயகாந்த் (Vijayakanth)  இளைய மகன் விஜய பிரபாகரன் முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் களம் காண்கிறார். மற்ற தேமுதிக வேட்பாளர்கள் விவரம் … Read more

பெண்களுக்கு மாதம் ரூ.3,000… தேர்தல் அறிக்கையை வெளியிட்டது அதிமுக!

election manifesto

ADMK: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. Read More – திமுகவை முந்திய அதிமுக.. எந்தெந்த தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?  இதனை முன்னிட்டு இரண்டு கட்டங்களாக அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். அதன்படி,  16 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலும், … Read more