இந்திய அளவில் அதிக டிஸ் லைக்குகளை மாஸ்டர் டிரைலர் பெறும்.! மீரா மிதுனின் சர்ச்சை ட்வீட்.!

வாரிசு நடிகரான விஜய்யின் மாஸ்டர் டிரைலர் இந்திய அளவில் அதிக டிஸ் லைக்குகளை பெற்ற டிரைலராக மாஸ்டர் டிரைலர் இருக்கும் என்று மீரா மிதுன் கூறியுள்ளார். நடிகர் விஜய், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய … Read more

மூணாறு நிலச்சரிவு குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட சூர்யா.!

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் துயரத்தில் தானும் பங்கெடுத்து கொள்வதாக சூர்யா உருக்கத்துடன் பதிவு செய்துள்ளார். கேரளாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தற்போது வரை 52பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி மாயமான 40க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் 5வது நாளாக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இச்சமயவத்திற்கு … Read more

மீரா மிதுனுக்கு கண்டனம் தெரிவித்த பாரதிராஜா.! நன்றி தெரிவித்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சூர்யா.!

சூர்யா மீரா மிதுனின் செயலுக்கு பதிலடி கொடுத்து வரும் ரசிகர்களுக்கு பயனுள்ள வகையில் நேரத்தை பயன்படுத்துங்கள் என்று கூறியுள்ளார். பிக்பாஸ் பிரபலமான மீரா மிதுன் பிரபலங்களை விமர்சனம் செய்து ரசிகர்களின் கோவத்திற்கு ஆளாகி வருகிறார். சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யாவை கடுமையாக விமர்சித்து பேசியதோடு, அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்ததார். இதற்கு ரசிகர்கள் மீராவை கடுமையாக விளாசி வந்த நிலையில் நேற்றைய தினம் இயக்குநர் பாரதிராஜா மீரா மிதுனை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததார். … Read more

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தினை தயாரிக்கும் பிரபல நிறுவனம்.! கசிந்த தகவல்.!

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக மைத்ரி மூவீ மேக்கர்ஸ் தயாரிப்பில் தெலுங்கின் முன்னணி நடிகரின் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ்,பிளாக் பஸ்டர் ஹிட்டான கைதி படத்தின் மூலம் சினிமாயுலகில் பிரபலமானார் என்றே கூறலாம். தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதன் மூலம் … Read more

6 மில்லியன் பார்வையாளர்களின் மனதை கவர்ந்த ‘காட்டுப்பயலே’ பாடல்.!

சூர்யாவின் காட்டுப்பயலே பாடல் 6மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இயக்குநர் சுதா கோங்குரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரை போற்று’. கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘காட்டுப்பயலே’ பாடல் வெளியாகி டிரெண்டிங்கில் இடம் பெற்றது. இந்த நிலையில் தற்போது காட்டுப்பயலே பாடல் 6மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. ஜி. … Read more

தேசிய விருது வென்ற இயக்குநருடன் கைக்கோர்க்கும் சூர்யா

தேசிய விருது பெற்ற இயக்குநரான பாண்டிராஜின் படத்தில் சூர்யா நடிக்க போவதாகவும், அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரை போற்று. சுதா கோங்குரா இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், ஹரியின் அருவா படத்திலும், கே. வி. ஆனந்த் இயக்கத்தில் அயன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. அதனையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் … Read more

4 மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட ‘காட்டுப்பயலே’ பாடல்.!

சூர்யாவின் காட்டுப்பயலே பாடல் 4 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இயக்குநர் சுதா கோங்குரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரை போற்று’. கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘காட்டுப்பயலே’ பாடல் வெளியாகி டிரெண்டிங்கில் இடம் பெற்றது. இந்த நிலையில் தற்போது காட்டுப்பயலே பாடல் 4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை … Read more

ஏழை மாணவனின் கனவை நனவாக்கிய சூர்யா.! நெகிழ்ச்சி செய்தி.!

நடிகர் சூர்யா ஏழை மாணவனை தனது சொந்த செலவில் மருத்துவர் படிப்புக்கு படிக்க வைத்து மாணவனின் கனவை நனவாக்கியுள்ளார். நடிகர் சூர்யா பல படங்களில் நடித்து சிறந்து வழங்குவது மட்டுமில்லாமல் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கியும் சமூக பணிகளை செய்து வருகிறது. ஆம், சூர்யா அகரம் அறக்கட்டளை என்பதை 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, அதன் மூலம் தமிழகத்தில் படிக்க இயலாமல் கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியை கற்றுக் கொடுக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. அந்த … Read more

வந்தாச்சு ரசிகளுக்கு சூர்யாவின் பர்த்டே ட்ரீட்.! சூரரை போற்று படக்குழுவினரின் பர்த்டே ஸ்பெஷல்.!

சூர்யாவின் பர்த்டே ட்ரீட்டாக ரசிகர்களுக்கு சூரரை படத்திலிருந்து காட்டுப்பயலே பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யா, ஜூலை 23ம் தேதியான இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.தற்போது பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பல பிரபலங்கள் இணைந்து காமன் டிபியை வெளியிட்டு டிரெண்டிங்கில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள சூரரை போற்று படத்தின் படக்குழுவினர் இணைந்து பர்த்டே ஸ்பெஷலாக தமிழில் ‘காட்டுப்பயலே’ என்ற பாடலையும், தெலுங்கில் … Read more

சூர்யாவின் பர்த்டே ட்ரீட்.! செம்ம வெயிட்டிங்கில் ரசிகர்கள்.!

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூரரை போற்று படத்திலுள்ள காட்டுபயலே பாடலின் ஒரு நிமிட வீடியோவை ஜூலை 23ம் தேதி காலை 10மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிகேஷ் … Read more