சட்டபூர்வமான கருக்கலைப்புக்கு அனுமதி அளித்த மூன்று நாடுகள்!இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

abortion

கருக்கலைப்பு என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமை என்று 1973-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த மைல்கல் ரோ வெர்சஸ் வேட் முடிவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் வரைவு அறிக்கை தயார் செய்து வருவதாக கூறப்படும் ஆவணம் ஒன்று நேற்று அமெரிக்காவில் கசிந்தது.இது அமெரிக்க பெண்கள் மற்றும் சமூகநலச் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கோபத்தை தூண்டியது.இதனால்,பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் செய்தி அமெரிக்க கருக்கலைப்புச் சட்டங்களை மத்திய கிழக்கில் உள்ள சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டியது.அந்த வகையில், கர்ப்பமானது தாயின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து அல்லது கருவில் அசாதாரணம் இல்லாவிட்டாலும் கூட வட ஆப்பிரிக்காவிலும் கருக்கலைப்பு சட்டவிரோதமானது.இருப்பினும்,கருக்கலைப்பு அனுமதிக்கப்படும் மூன்று நாடுகள் இங்கே.

இஸ்ரேல்:

இஸ்ரேலில் கருக்கலைப்பு சில சமயங்களில் சட்டபூர்வமானதாக இருந்தாலும் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.அந்த வகையில் இஸ்ரேலில் கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்கள் “கர்ப்பத்தை நிறுத்தும் வாரியத்தின்” அனுமதியை முதலில் பெற வேண்டும்.

மேலும்,இஸ்ரேலிய சுகாதார அமைச்சகத்தின்படி, பின்வரும் நிபந்தனைகளில் ஒன்றையாவது பூர்த்தி செய்து கருக்கலைப்பு நடைபெற வேண்டும்.அதன்படி,

  • பெண்ணின் வயது 18 அல்லது 40-க்கு மேல் இருக்க வேண்டும்.
  • கற்பழிப்பு அல்லது பாலுறவு போன்ற சட்டவிரோத உடலுறவின் விளைவாக ஏற்படும் கர்ப்பத்தை கலைக்கலாம்.
  • கர்ப்பம் தாயின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது உடல் அல்லது உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும்போது கருக்கலைப்புக்கு அனுமதி.
  • தாய் திருமணமாகவில்லை அல்லது கருவில் உடல் அல்லது மன குறைபாடு இருந்தால் அனுமதி.

அதே சமயம்,கருக்கலைப்பு தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரத்தை பெண்களுக்கு அதிக அளவில் அளிக்கும் சீர்திருத்தங்களுக்கு இடதுசாரி மெரெட்ஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் வலியுறுத்தினர். ஆனால்,சில மதவாத பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த முயற்சிகளுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர் என்று ஜனவரி மாதம் தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

துருக்கி:

கர்ப்பம் தரித்த முதல் 10 வாரங்கள் வரை தடையின்றி கருக்கலைப்பு செய்ய துருக்கியில் சட்டப்பூர்வமான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கர்ப்பம் தாய்க்கு ஆபத்து அல்லது கருவில் அசாதாரணம் இருந்தால் கருக்கலைப்பு சாத்தியமாகும்.இதுபோன்ற சந்தர்ப்பங்களில் செய்யப்படும் கருக்கலைப்புகளை சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே,கடத்த 2020 ஆம் ஆண்டில்,துருக்கிய செய்தி நிறுவனமான Duvar, பெரும்பாலான பொது மருத்துவமனைகள் பெண்களின் கோரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் கருக்கலைப்பு செய்வதில்லை என்று தெரிவித்தது.அதே சமயம்,ஒரு சில தனியார் மருத்துவமனைகள் மட்டுமே கருக்கலைப்பு செய்கின்றன என்று கூறப்படுகின்றன.

துனிசியா:

துனிசியாவில் முதல் மூன்று மாதங்கள் முடியும் வரை கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும்,கருவின் அசாதாரணங்கள் அல்லது தாயின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்பட்டால் முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகும் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க உண்டு.இதற்காக,நாடு முழுவதும் பொது “குடும்பக் கட்டுப்பாடு மையங்கள்” உள்ளன.

அதைப்போல,ஈரானில் பல ஆண்டுகளாக, கர்ப்பம் பெண்ணின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது கருவில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக மூன்று மருத்துவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக இருந்தது.

இந்த வேளையில்,நவம்பர் 2021 சட்டம் இந்த அமைப்பை ஒரு நீதிபதி மற்றும் இரண்டு மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவாக மாற்றியது. இதன்மூலம்,அரசு ஊடகங்கள் கருக்கலைப்பைக் கண்டிக்க வேண்டும் எனவும் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சட்டவிரோத கருக்கலைப்புகளை அடையாளம் காண வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் நோக்கம்,கருக்கலைப்பை குறைத்து ஈரானின் மக்கள்தொகையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

கருக்கலைப்பு செய்வதற்கான உரிமை பெண்களுக்கு உண்டு – கேரள உயர்நீதிமன்றம்!

பெண்களுக்கு கருக்கலைப்பு சட்டப்படி தங்கள் கருவை கலைப்பதற்கு உரிமை உள்ளது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கர்ப்பம் தரித்துள்ள நிலையில், அவரது வயிற்றில் வளர்ந்து வரக்கூடிய சிசு குறைபாடு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து 22 வாரங்கள் வளர்ச்சியடைந்துள்ள இந்த சிசுவை கலைப்பதற்கு கேரள உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பார்வைத்திறன் குறைபாடு உள்ளதோடு அவரது இடது கால் செயலிழந்து நடக்க முடியாத நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஆய்வு செய்த கேரள உயர் நீதிமன்றம், கர்ப்பிணியின் வயிற்றில் வளரக்கூடிய 22 வார சிசுவுக்கு கிளைன்ஃபெல்டா் எனும் மரபணு கோளாறு உள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரைக் கொல்லும் அளவுக்கு இந்த குறைபாடு அபாயகரமானதாக இல்லாவிட்டாலும், குறைபாடு கொண்ட அந்த குழந்தை வளரும் போது அதன் தேவையைப் புரிந்து கொள்வதில் தாய்க்கு சிரமம் ஏற்படும்.

எனவே கருவை வைத்துக் கொள்வதா அல்லது கலைப்பதா என்பது குறித்து முடிவு செய்யக் கூடிய உரிமை பெண்களுக்கு உள்ளது எனவும், கருக்கலைப்பு சட்டப்படி குறிப்பிட்ட வாரத்தில் வயிற்றில் வளரக்கூடிய சிசுவை கலைப்பதற்கு தாயாருக்கு உரிமை உள்ளது எனவும், வயிற்றில் வளர கூடிய சிசு குறைபாடுடன் இருந்தால் அதை கலைப்பதற்கு நீதிமன்றங்கள் அனுமதி அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கோரியிருந்தபடி அந்த பெண்ணின் வயிற்றில் வளர கூடிய 22 வார கருவை கலைப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.

3-வதும் பெண்குழந்தை என்பதால் மனைவியின் வயிற்றை கத்தியால் அறுத்து கருவை கலைத்த கணவன்..!

தனக்கு பிறக்கவிருக்கும் 3 ஆவது குழந்தையும் பெண்குழந்தை என்று தெரிந்த காரணத்தால் வீட்டில் வைத்து தனது மனைவியின் வயிற்றை அறுத்து கருவை கலைத்துள்ள கணவன். 

கர்நாடக மாநிலத்தில் விஜயாபுரா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதி அரவிந்த், விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் விஜயலட்சுமி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அரவிந்த் தனக்கு ஆண் குழந்தை பிறக்கபோகவதாக உறவினர்களிடம் தெரிவித்து வந்துள்ளார். அதன் பிறகு, வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஸ்கேன் சென்டருக்கு மனைவியை அழைத்து சென்றுள்ளார்.

அங்கு மனைவியின் வயிற்றில் வளர்வது பெண் குழந்தை என்று தெரிவித்தவுடன் அரவிந்த் மனமுடைந்துள்ளார். மூன்றாவதும் பெண் குழந்தை என்பதால் அந்த குழந்தையை கலைக்குமாறு மனைவியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மனைவி மறுத்துவிட்டார். இதன் காரணத்தால், 2 நபர்களை அழைத்து வந்து வீட்டில் இருக்கும் தனது மனைவியின் கருவை கலைக்க முற்பட்டுள்ளார். இதனை எதிர்த்த விஜயலட்சுமியின் வயிற்றை அரவிந்த் மற்றும் 2 நபர்கள் சேர்ந்து கத்தியால் அறுத்து கருவை கலைத்துள்ளனர்.

கத்தியால் கிழித்ததால் விஜயலட்சுமிக்கு ரத்தம் வெளியேற ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து மூவரும் அவ்விடம் விட்டு தப்பி சென்றுள்ளனர். விஜயலட்சுமியின் உயிர் ஊசலாடி கொண்டிருக்க, அக்கம் பக்கத்தினர் இவரை விரைவாக தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்த விசாரணையில் விஜயாபுரா புறநகர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அரவிந்த் மற்றும் உடன் இருந்த இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், குழந்தை பிறப்பதற்கு முன்பே எந்த குழந்தை என்பதை கூறுவது சட்டவிரோத செயல் அதன்படி, ஸ்கேன் சென்டரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

6 மாத கருவை கலைக்க மனைவிக்கு விஷம் கொடுத்த ராணுவ வீரர் குடும்பம் -பெண்ணும் உயிரிழந்த சோகம்!

6 மாத கருவை கலைக்க மனைவிக்கு விஷம் கொடுத்த ராணுவ வீரர் குடும்பத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை என்னும் பகுதிக்கு அடுத்த வக்கணம்பட்டி சேர்ந்த சிவா என்பவரின் மகள் சத்தியவதனா என்பவருக்கும், ஆண்டியப்பனூரை சேர்ந்த ராணுவ வீரரான மணிவண்ணன் என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றுள்ளது. ராணுவ வீரராக பஞ்சாபில் பணிபுரிந்து வந்த மணிவண்ணன் தனது மனைவியையும் பஞ்சாப்புக்கு அழைத்துச் சென்று வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது சொந்த ஊருக்கு மனைவியை அழைத்து வந்த மணிவண்ணன், தனது தாய் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து மனைவியின் கருவை கலைக்க முடிவு எடுத்து அவருக்கு விஷம் கொடுத்துள்ளார். இந்நிலையில் அதனை குடித்த பின் அவரது மனைவிக்கு கரு கலைந்த நிலையில் உடல் நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதன்பின் மருத்துவமனையில் அவரது மனைவியை அனுமதித்து சிகிச்சை கொடுத்து வந்துள்ளனர். ஆனால் ஆறு மாத கரு கலைந்த நிலையில் பெண்ணின் உடல் மிகவும் பாதிப்படைந்துள்ளது, சத்தியவதனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மனைவி உயிரிழந்த அதிர்ச்சியில் மணிவண்ணன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். இந்நிலையில் சத்யவதனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தப்பியோடிய மணிவண்ணனை தற்பொழுது பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்கள் திட்டமிட்டுதான் கொலை செய்ததாகவும், கருகலைப்பு மட்டுமல்ல இது இரட்டை கொலை எனவும் அவரது உறவினர் மற்றும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் மணிவண்ணனுக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்ய வேண்டும் எனவும் தற்பொழுது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிக் டாக்கில் மலர்ந்த காதல், திருமணத்துக்கு பின் ஜாதி குறுக்கிட்டதால் கருக்கலைப்பு செய்து விரட்டியடிப்பு!

டிக் டாக்கில் மலர்ந்த காதல், திருமணத்துக்கு பின் ஜாதி குறுக்கிட்டதால் கருக்கலைப்பு செய்து விரட்டியடித்த காதலன் மற்றும் குடும்பத்தினர்.

சென்னையிலுள்ள வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ராணிப்பேட்டை செங்கோடு பகுதியை சேர்ந்த 19 வயது சாந்தகுமார் என்பவருக்கும் டிக் டாக் மூலமாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சிறுமி வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு எழுந்ததால், சிறுமியை வீட்டை விட்டு வெளியே வர சொன்ன சாந்தகுமார் தனது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். மூன்று மாதங்களாக சந்தோஷமாக இருந்த இவர்களுக்கு இடையில் திடீரென சிறுமி கர்ப்பம் ஆனதும் சிறுமி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சாந்தகுமார் பெற்றோர் அந்தப் பெண்ணை வெளியே போகும்படி விரட்டியுள்ளனர்.

இந்நிலையில் சாந்தகுமார் தனது பெற்றோருடன் சேர்ந்து 38 வயதான பாஷா எனும் போலி மருத்துவரிடம் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்து வைத்துள்ளனர். அதன் பின்பு சிறுமியை வீட்டைவிட்டு துரத்திவிட்டுள்ளனர். என்ன செய்வதென்று அறியாமல் காட்பாடியில் உள்ள குழந்தை காப்பகத்தில் சென்று சிறுமி தஞ்சம் அடைந்துள்ள நிலையில், காப்பக அலுவலர்களிடம் தனக்கு நடந்ததை பற்றி கூறியதை அடுத்து அவர்கள் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் போலி டாக்டர் பாஷா உட்பட சாந்தகுமார் அவரது உறவினர்கள் 3 பேரை கைது செய்துள்ளனர்.

Exit mobile version