முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் – பிரதமர் மோடி

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர்.

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்கள் இணைய பக்கத்தில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர். அவரது வாழ்க்கை லட்சக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.’ என பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த தேசத்திற்கும் கனவுகளை விதைத்த ஏவுகணை நாயகர் – டிடிவி தினகரன்

ஒட்டுமொத்த தேசத்திற்கும் கனவுகளை விதைத்த ஏவுகணை நாயகர்.

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏவுகணை நாயகனான அப்துல்கலாம், இன்றைய இளம் தலைமுறையினருக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக வாழ்ந்து சென்ற பெருமைக்குரிய தலைவர்  ஆவார்.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு, பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற  நிலையில், டிடிவி தினகரன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘எல்லாத் தரப்பினரின் அன்பையும் பெற்று, மக்களின் குடியரசுத்தலைவராக திகழ்ந்த போற்றுதலுக்குரிய டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று. மாணவர்கள்,இளைஞர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்திற்கும் கனவுகளை விதைத்த ஏவுகணை நாயகரை எந்நாளும் போற்றிடுவோம்!’ என பதிவிட்டுள்ளார்.

என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்! – கமலஹாசன்

என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்.

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏவுகணை நாயகனான அப்துல்கலாம், இன்றைய இளம் தலைமுறையினருக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக வாழ்ந்து சென்ற பெருமைக்குரிய தலைவர்  ஆவார்.

இந்நிலையில், இவரது பிறந்தநாளை முன்னிட்டு, பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற  நிலையில், நடிகர் கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர். அவருடைய சாதனைகளும், தொலைநோக்குப் பார்வையும், நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும். ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான திரு.அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும், நினைவும், நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி.’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்துல்கலாமின் நேர்மையை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் : நடிகர் விவேக்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டுமே தனது கவனத்தையும், உழைப்பையும் செலுத்தாமல், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக வளம் வருகிறார்.
நடிகர் விவேக்கை பொறுத்தவரையில், இவர் மரம் நடுதல், மழை நீர் சேகரிப்பு என இயற்கையின் மீது அக்கறை கொண்டவராக செயல்பட்டு வருகிறார். இதனையடுத்து, சென்னை எம்.ஜி.ஆர் நகர் அரசு பள்ளியில் மரம் நாடு விழாவில், நடிகர் விவேக் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், அப்துல்கலாமின் கடுமையான உழைப்பே, நேர்மையை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பிட்சா, பர்கர் போன்ற உணவுகள் உடல் நலத்திற்கு நல்லதல்ல. இட்லி தான் உடலுக்கு நல்லது. மாணவர்கள் தாய்மொழி மற்றும் ஆசிரியர்களையும் நேசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஏவுகணை நாயகன் மறைந்த நாள் இன்று!

டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் நாள், தமிழ்நாட்டில் உள்ள, இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஜைனுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா அவர்களுக்கு 5-வது மகனாக பிறந்தார். இவர் தனது பள்ளி பருவத்தில், பிரகாசமான மாணவனாக திகழ்ந்தார்.  தனது குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக சிறுவயதிலேயே வேலைக்கும் சென்றுள்ளார்.

ஏவுகணை நாயகன்

இவர் 1960-ம் ஆண்டில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். பின் இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் முதன்மை அறிவியலாளராக சேர்ந்தார். அதன்பின் இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார்.  மேலும் பல ஆராய்ச்சி நிறுவனங்களில் பனி புரிந்துள்ளார். ஒரு தனிமனிதனாக இருந்து தனது வாழ்வில் பல சாதனைகளை படைத்து, எளிமையின் உருவாய் வாழ்ந்தார் என்பதற்கு அடையாளம் இவர் மட்டுமே.

ஏவுகணைகளை ஏவிய சாதனை மன்னன் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்திய அரசாங்கம் மட்டுமல்லாது, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் இவருக்கு பல பட்டங்களையும், விருதுகளையும் வழங்கியுள்ளது.

குடியரசு தலைவர்

இவர், கே.ஆர்.நாராயணனுக்கு பிறகு, லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியாவின் பதினொன்றாவது குடியரசு தலைவராக, ஜூலை 25, 2002-ல் பொறுப்பேற்றார். அதன்பின் ஜூலை 25, 2007-ம் ஆண்டு வரை குடியரசு  தலைவராக பணியாற்றினார்.

மாணவர்களின் ஆசான்

கனவு காணுங்கள் 

கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல 

உன்னை தூங்க விடாமல் செய்வது எதுவோ 

அதுவே கனவு 

அப்துல்கலாம் மாணவர்களின் வளர்ச்சியில் மிகவும் அக்கறை கொண்டவராக செயல்பட்டு வந்தார். கனவு காணுங்கள் என, உறங்கிக் கொண்டு இருந்த மாணவர்களின் லட்சிய கனவை தட்டி எழுப்பி விட்டவர். தன்னை போல் மற்றவர்களும் வளர வேண்டும் என்று எண்ணிய ஒரு மிகப்பெரிய தலைவர் அப்துல்கலாம்.

இறுதி மூச்சும் மாணவர்களுக்காக

உலகம் உன்னை அறிமுகம் 

செய்வதை விட..!

உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!

என்ற அவரது பொன்மொழிக்கேற்றவாறு நடந்தவர் அபதுல்கலாம். மாணவர்களின் நலனில் அக்கறை  கொண்டவராக இருந்த இவர், இறுதியாக மாணவர்களிடம் உரையாற்றும் போதே அவரது உயிரும் அவரை விட்டு பிரிந்துள்ளது. ஜூலை 27, 2015 இந்தியாவின் மோகலாயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில், மேடையிலேயே மயங்கி விழுந்தார். அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் குடியரசு தலைவராக பொறுப்பேற்ற நாள்!

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இந்தியாவின் ஒரு சிறந்த தலைவர் ஆவார். இவர் ஜூலை 25-ம் நாள் 2002-ல் குடியரசு தலைவராக பொறுப்பேற்றார். இவர் குடியரசு தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தார்.

இவர் ஏவுகணை வாகன தொழிநுட்ப வளர்ச்சியில் ஈடுபாட்டுடன் இருந்ததால், இந்திய ஏவுகணை நாயகன் என அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவை ஒரு வளரும் நாடாகாவே பார்த்தவர். இவர் 2002-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில், லெட்சுமி சாகலை தோற்கடித்து, குடியரசு தலைவராக பதவியேற்றார். இவர், ஜூலை 25, 2002 முதல் ஜூலை 25 2007 வரை குடியரசு தலைவராக பணியாற்றினார்.

Exit mobile version