7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை

7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.  அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. இதனிடையே மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் , 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை … Read more

“7.5% இடஒதுக்கீடு தரக்கூடாது” – கடிதம் எழுதிய பாஜக கல்வி பிரிவு மாநில செயலாளர்.. எல்.முருகன் விளக்கம்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என ஆளுநருக்கு தமிழக பாஜக கல்வி பிரிவு செயலாளர் நந்தகுமார் கடிதம் எழுதியதற்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார். அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவ – மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் செப்டம்பர் 16-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஆளுநர் கையெழுத்திட்டால் மட்டுமே, அது சட்டமாக … Read more

7.5 % உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் – கனிமொழி

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாமல், ஆளுநர் தாமதமின்றி உடனடியாக 7.5 சத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று  கனிமொழி தெரிவித்துள்ளார். 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தி , திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,அரசுப்பள்ளியில் படிக்கும் தமிழக மாணவர்கள் தனியார் பயிற்சியின்றி, நீட் தேர்வில் வெற்றிபெற்று உதவும் பொருட்டு, சட்டப்பேரவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு … Read more

7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார் -அமைச்சர் ஜெயக்குமார் 

7.5% உள் ஒதுக்கீடு ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு இயற்றியது.  இதனால் உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.இதனால் ஆளுநரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.ஆகவே 7.5% உள் ஒதுக்கீடு … Read more

7.5% உள்ஒதுக்கீடு -ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி ஆளுநர் மாளிகை முன் இன்று  திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு  ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது .இதனால் எதிர்க்கட்சிகள் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.மேலும் அரசு ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் … Read more

7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

தமிழக மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு இயற்றியது. இதனால் உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்நிலையில் … Read more

“7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்” – எல்.முருகன் வலியுறுத்தல்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சாதனையை குறிப்பிடும் விதமாக சென்னை, தி-நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சாதனை கொலுவை பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், நீட் தேர்வில் இந்தியளவில் சாதனை புரிந்த அரசுப்பள்ளி மாணவர்களை பாராட்ட வேண்டும் எனவும், மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு … Read more