அனல் பறக்கும் தேர்தல் களம்! முதல்வர் இன்று விழுப்புரத்தில் பரப்புரை!

mk stalin

MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மற்றும் கடலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த சூழலில், திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைவர்களும் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், வரும் தேர்தலில் திமுக 21 இடங்களில் நேரடியாக போட்டியிடும் நிலையில் கூட்டணி கட்சிகள் … Read more

#Breaking : இந்த மாவட்டங்களில் இன்று இரவு பேருந்து சேவை கிடையாது.! பறக்கும் புதிய உத்தரவுகள்….

புயல் எச்சரிக்கை தொடர்பாக 6 மாவட்டங்களில் இன்று இரவு நேர பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டதாகவும், மாவட்ட தலைமை அலுவகங்கள் 24 மணிநேரமும் செயல்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.   மாண்டஸ் புயல் வங்கக்கடலில் உருவாகி தமிழகத்தை நெருங்கி கொண்டிருப்பதால், வடதமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை, அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள இன்று தலைமை செயலர் இறையன்பு தலைமையில் அனைத்து துறை செயலர்களும் ஆலோசனையில் ஈடுப்பட்டனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் வருவாய் நிர்வாக … Read more

20 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்..!

விழுப்புரம் மாவட்டத்தில் 20 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 20 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவு பிறப்பித்தார்.

“இனி இதுபோன்று நடந்தால் நிரந்தர பணி நீக்கம்” – போக்குவரத்துத் துறை கடும் எச்சரிக்கை!

விழுப்புரம் அரசு பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து,இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. நேற்று விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் சென்ற அரசு பேருந்தில் 20 வயது கல்லூரி மாணவிக்கு நடத்துநர் சிலம்பரசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் ஓட்டுநராக இருந்த அன்புச் செல்வன் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.பேருந்தில் பயணிகள் அதிகம் இல்லாததால் மாணவிக்கு, நடத்துனர் பாலியல் … Read more

#Breaking:கனமழை:விழுப்புரம்,கன்னியாக்குமரி மாவட்டத்திலும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகம்:கனமழை காரணமாக கீழ்கண்ட மாவட்டங்களில் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும்,கன்னியாக்குமரி மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக தமிழகத்தில் 28 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல மாவட்டங்களில் கனமழை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால்,பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 12 மாவட்டங்களில் பள்ளி, … Read more

“இவர்களுக்கும் இவை தேவை” – முதல்வருக்கு எம்.பி.ரவிக்குமார் முக்கிய கோரிக்கை!

விழுப்புரம்:நடப்பு ஆண்டு பட்டப் படிப்பில் சேர்ந்திருப்பவர்கள் 10 ஆம் வகுப்புக்குப் பிறகு பொதுத் தேர்வு எதையும் சந்திக்காதவர்கள்,எனவே இவர்களுக்கு ஒரு திட்டத்தை முதல்வர் வடிவைக்க வேண்டும் என்று எம்.பி.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதனால் மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை நீக்க பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு “இல்லம் தேடி கல்வி” என்ற புதிய … Read more

“முதல்வரே…இதில் தலையிடுங்கள்;உரிய இழப்பீடு வழங்குங்கள்” – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

சென்னை:மழை வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்புக்கு ஆளும் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுவதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மழை வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு,பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கி,அவர்களது மறுவாழ்விற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வட கிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடலூர் … Read more

#Breaking:முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் – பெண் எஸ்பி நீதிமன்றத்தில் ஆஜர்!

விழுப்புரம்:சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்பி மீது பாலியல் புகார் அளித்த பெண் எஸ்பி சாட்சி விசாரணைக்காக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் என்பவர் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து  சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன்,இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. … Read more

“முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு திடீர் ரத்து;தாக்குதல் நடந்தால் திமுகதான் பொறுப்பு” – இபிஎஸ் கடும் கண்டனம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அவர்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடைபெற்றால் அதற்கு இந்த தி.மு.க. அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்டக் கழக செயலாளருமான சிவி சண்முகம் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறையினரின் பாதுகாப்பை திடீரென்று வாபஸ் பெற்றதை அதிமுக சார்பில் கடுமையாக கண்டிப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “முன்னாள் … Read more

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை – முன்னாள் சிறப்பு டிஜிபி இன்று நேரில் ஆஜர்!

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இன்று விசாரணை. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்.பி. மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கானது விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் எஸ்.பி. விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஜரான நிலையில், முன்னாள் … Read more