விஜய் தொடங்கும் அரசியல் கட்சி பெயர் இதுவா?

Vijay

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வரும் நிலையில், அவர் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் கூட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கி இருந்தார். அதன்பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவியும் வழங்கி இருந்தார். இதுமட்டுமின்றி அடிக்கடி விஜய் தனது … Read more

அரசியல் கட்சியாக பதிவு செய்ய டெல்லி செல்லும் விஜய் மக்கள் இயக்கம?

Vijay Makkal Iyakkam

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய மக்கள் இயக்கம் நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அண்மைய காலமாக சினிமா வாழ்க்கையை தாண்டி அடுத்ததாக அரசியலில் கால் பதிக்க ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை தற்போது செய்து வருவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, அம்பேத்கர், காமராஜர் போன்ற முக்கிய தலைவர்கள்ளின் பிறந்தநாள் தினத்தன்று அவர்களின் சிலைகளுக்கு தனது நிர்வாகிகளை மாலை போட வைப்பதில் இருந்த, முக்கிய தலைவர்களாக இருக்கும் … Read more

நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்க முடிவா?

Vijay Makkal Iyakkham

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், நடிகர் விஜய் இன்று பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்ற  இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில், எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும். மக்கள் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்கவும், மக்கள் பணிகளை செய்ய … Read more

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை!

Vijay Makkal Iyakkam Vijay

சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்திலிருந்தும் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இரு மாதங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் பல்வேறு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வந்தது. தற்போது, நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், விஜய் மக்கள் … Read more

விஜய் மீது காலணி வீச்சு: மக்கள் இயக்கம் காவல் நிலையத்தில் புகார்.!

Shoe on Vijay

கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் மீது காலனி வீசிய சம்பவம் தொடர்பாக தென் சென்னை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளனர். தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 28ம் தேதி காலமானார். அப்போது அன்று இரவு விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் நேற்று வருகை தந்தார். அஞ்சலி செலுத்தும்போது விஜயகாந்தின் உடலை பார்க்க முடியாமல் கண்கலங்கி அழுதார். … Read more

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்!

Vijay Makkal Iyakkham

மிக்ஜாம் புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மக்களுக்கு ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் டிசம்பர் 14 இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், மிக்ஜாம் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும். காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் தளபதி … Read more

அரசுடன் கைகோர்த்து உதவுங்கள்… மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்.!

Actor Vijay

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட  மழை வெள்ளத்தினால் சென்னை புறநகர் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான  நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு மட்டுமல்லாது, பல்வேறு அமைப்பினர் , தன்னார்வலர்களும் களப்பணி ஆற்றி வருகின்றனர். வெள்ளம் அதிகம் பாதித்த சென்னை புறநகர் பகுதியில் தண்ணீரை வெளியேற்றும் வேலையில் ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை முக்கிய பகுதிகளில் நிலைமை சீரமைக்கப்பட்டு பொது போக்குவரத்துகள் வரை இயக்கப்பட ஆரம்பித்துவிட்டன. ஆனால் புறநகர் மக்கள் இன்னும் வீட்டை … Read more

மிக்ஜாம் புயல்: மக்களுக்கு உதவ நேரடியாக களமிறங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கம்.!

Vijay Makkal Iyakkam

மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தில் சென்னை தற்போது திணறி வருகிறது. கனமழை கொட்டித்தீர்த்து மழைநீர் தேங்கி நிற்கின்றது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்திருப்பதால், பலரும் தங்குவதற்கு இடம் இல்லாமல் சாப்பிட உணவு இல்லாமல் சிரமத்தில் இருக்கிறார்கள். பல இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும்பாலான சாலை போக்குவரத்து சேதமடைந்துள்ளது. குறிப்பாக, தமிழ் சினிமா பிரபலங்களான விஷால், வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா போன்ற … Read more

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் விழியகம்” என்ற கண் தான செயலி அறிமுகம்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் விழியகம்” என்ற கண் தான செயலி அறிமுகம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் விழியகம்” என்ற கண் தான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில், இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இச்செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

உன் ரத்தம், என் ரத்தம் வேறே இல்லை.! தளபதி செய்த நெகிழ்ச்சி சம்பவம்.!

விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு நடிகர் விஜய் சென்னை புறநகர் பனையூர் அலுவலகத்தில், அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்தித்து சில அறிவுரைகளை கூறினார்.  பேனர் வைப்பது மட்டும் போதும், அதில் பால் அபிஷேகம் செய்வது போன்ற செயல்களில் தயவுசெய்து ஈடுபட வேண்டாம் எனவும், ஏழை எளிய மக்கள் மற்றும் தேவையுள்ள பொதுமக்களுக்கு விஜய் மக்கள் … Read more