#Breaking:லக்கிம்பூர் விவகாரம்:.5,000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்…முக்கிய குற்றவாளி யார்?..!

உத்தரப் பிரதேசம்:லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை உ.பி.காவல்துறை தாக்கல் செய்துள்ளது. அதில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா பெயர் முக்கிய குற்றவாளியாக இடம் பெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.அதன்பின்னர்,நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். … Read more

11 மணி நேர விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா ..!

லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் 11 மணி நேர விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா.  உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரி யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஆஷிஷ் மிஸ்ரா மகன் உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார். … Read more

லக்கிம்பூர் வன்முறை: “எனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை; நீதிமன்றத்தில் நாளை ஆஜாராவார்” – மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா..!

லக்கிம்பூர் வன்முறை குறித்து சம்மன் அனுப்பட்டது தொடர்பாக எனது மகன் நாளை காவல்துறை முன்பு ஆஜராவார் என்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார். அக்டோபர் 3 ஆம் தேதி காலை உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தனர். அப்போது மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருந்தனர். அந்த … Read more

லக்கிம்பூர் வன்முறை-மத்திய அமைச்சர் மகனின் ஆதரவாளர்கள் இரண்டு பேர் கைது…!

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனின் ஆதரவாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 3 ஆம் தேதி காலை உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தனர். அப்போது மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அமைச்சரின் மகன் சென்ற வாகனம் … Read more

தடுப்பு காவலில் பிரியங்கா காந்தி;மொபைல் இணைய சேவைகள் நிறுத்தம்..!

பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சீதாபூரில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அவர்களின் மகனுடைய கார் மோதியதில் 4 பேர் மற்றும் கலவரத்தில் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.இதனால்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது. இதனைத் தொடர்ந்து,கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விவசாயிகளை … Read more

ராகுல் காந்தி லக்கிம்பூர் பயணம்..! உ.பி அரசு அனுமதி மறுப்பு…!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் இன்று லக்கிம்பூர் செல்ல இருந்த நிலையில், உத்திர பிரதேச அரசு அனுமதி மறுத்துள்ளது.  உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள்   சென்ற போது … Read more

“பிரியங்கா காந்தியை உடனே விடுதலை செய்க”- விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம்..!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூரில் பாஜக வன்முறை என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கார் மோதியதில் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.மேலும்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.இந்த சம்பவத்துக்கு,நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,நேற்று விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் சென்ற காங்கிரஸ் … Read more