#Breaking:218 இந்தியர்களுடன் புறப்பட்ட 9-வது விமானம்!

218 இந்தியர்களுடன் ருமேனியாவின் புக்காரெஸ்டில் இருந்து 9-வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. உக்ரைனில் தரைப்படை,வான்வழி மற்றும் கப்பல் படைகளை கொண்டு ரஷ்யா உக்கிரமாக தாக்கி வரும் நிலையில்,உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது.இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ள நிலையில்,மேலும் பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த சூழலில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில், ருமேனியா,ஹங்கேரியில் இருந்து … Read more

ருமேனியா: மருத்துவமனை தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு..!

ருமேனியா நாட்டில் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ருமேனியாவின் கான்ஸ்டன்டா நகரில் உள்ள கொரோனா தொற்று சிகிச்சை நடைபெறும் மருத்துவமனையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 113 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். மேலும், 10 பேர் தீவிர சிகிச்சை மையத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில்  தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்த இடத்தில் இருந்த மற்ற நோயாளிகளை பத்திரமாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளனர்.