அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் – ரவீந்திரநாத் எம்.பி

வரவிருக்கும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என ரவீந்திரநாத் எம்.பி பேட்டி.  அதிமுக எம்.பி ரவீந்திரநாத், பழனி கோயிலில் தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குக திட்டம் பாராட்டுக்குரியது. மேலும், வரவிருக்கும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து அதிமுக எம்.பி., ரவீந்திரநாத் வாழ்த்து..!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து அதிமுக எம்.பி., ரவீந்திரநாத் வாழ்த்து  தெரிவித்துள்ளார். இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு … Read more

ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு..!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த மிலானி என்பவர் தேனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 30 -ம் தேதி மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் … Read more