தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்காதீர் – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி !

தமிழகத்தில் ஒரு சிலரின் தேவைக்காக அனைவரும் ஏன் இந்தி மொழியை கற்க வேண்டும் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பது என்பது இந்திய நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் என்று மத்திய அரசை எச்சரித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் கல்கத்தாவில் கடந்த மாதம் பாஜக பேரணியில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலையானது இன்று வித்யாசாகர் கல்லூரியில் நிறுவும் விழாவில் இதனை மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  

அரசு முறை பயணமாக சீனா செல்கிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி..!

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 9 நாள் பயணமாக வரும் 22-ம் தேதி சீனா செல்கிறார். பீஜிங், ஷாங்காய் மற்றும் ஜினான் நகரங்களில் சென்று பார்வையிடுகிறார். அதனை தொடர்ந்து அந்நாடு அதிகாரிகளுடம் ஆலோசனை நடத்துகிறார். மேற்கு வங்க மாநில வளர்ச்சி திட்டங்களுக்காக சீனாவுடன் இணைந்து செயல்படும் வகையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில், இந்த சந்திப்பினிடையே கையெழுத்திட உள்ளார். மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சீனா செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் … Read more