காசியில் புதுப்பொலிவு பெரும் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு.! வாரணாசி கலெக்டர் அசத்தல் தகவல்.!

காசியில் 4 ஆண்டுகள் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டை புதுப்பிக்கபட உள்ளது என வாரணாசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  மகாகவி பாரதியார் இந்திய முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார். அப்படி அவர் 1898ஆம் ஆண்டு முதல் 1902 ஆண்டு வரையில் உத்திர பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் காசியில் தனது அத்தை வீட்டில் தங்கி இருந்தார். அப்போது தான் ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்று தேர்ந்தார். மேலும், அப்போது வாழ்ந்து வந்த பாலகங்காதர திலகர் … Read more

இந்த நிகழ்ச்சி பாரதியாரின் கனவை நிறைவேற்றும் நிகழ்ச்சி -எ ல்.முருகன்

காசிக்கும் தமிழகத்துக்கு உள்ள மிகப்பெரிய உறவை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு. வாரணாசியில் உள்ள பனராஸ் பல்கலைக்கழகத்தில், காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்டி சட்டை அணிந்து கலந்து கொண்டுள்ளார். மேலும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் முருகன், இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வு வரும் 17-ஆம் தேதி வரியா … Read more

நம் பாரதியின் எழுத்து இன்னும் சுதந்திரம் பேசும்.. மகாகவியின் மறக்கமுடியாத சில சரித்திர பக்கங்கள்…

சுதந்திர வேட்கையினை மக்கள் மத்தியில் தனது இலக்கியம் மூலம் உயிரூட்டிய நம் மகாகவி பாரதியின் சிறு குறு குறிப்பு.  1882ஆம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். தனது பதினோராம் வயதிலேயே கவி பாடும் ஆற்றல் கொண்டதால், பின்னாளில் எட்டயபுரம் மன்னரின் அரசவை கவிஞர் ஆனார். அவர் வாழ்ந்த காலம் தான் சுதந்திரத்திற்கான போராட்டமும், மக்களுக்கு சுதந்திரம் மீதான வேட்கையும் தலைதூக்க ஆரம்பித்த காலம்.  அப்போது தனது பாடல்கள் மூலம் … Read more

பாரதியார் பாடலை பாடிய அருணாச்சல பிரதேச சகோதரிகள்… தமிழில் பாராட்டி அசத்திய பிரதமர் மோடி.!

பாரதியார் பாடலை தூய தமிழில் அருணாச்சல பிரதேச மாநில பெண்கள் இருவர் படுகின்றனர். அதனை குறிப்பிட்டு பிரதமர் மோடி தமிழில் பாராட்டியுள்ளார்.  தனது விடுதலை வேட்கை கொண்ட பாடல்கள் மூலம் சுதந்திரத்திற்காக ஏங்கி இருந்த இந்திய மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டியவர் மகாகவி பாரதியார். இவரது ‘ பாருக்குள்ளே நல்ல நாடு’ எனும் தமிழ் பாடலை பிழையில்லாமல், அச்சு பிசிராமல் தூய தமிழில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இரு பெண் சகோதரிகள் பாடியுள்ளனர். இதனை டிவிட்டரில் பார்த்த … Read more

பாரதியார்,வ.உ.சி. பெயரில் ஆய்வு இருக்கை – உயர்கல்வித்துறை உத்தரவு.

பாரதியார் பெயரிலும்,வ.உ.சி. பெயரிலும் ஆய்வு இருக்கைகள் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவு. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரிலும்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் வ.உ.சி. பெயரிலும் ஆய்வு இருக்கைகள் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.சிண்டிகேட்டின் ஒப்புதலைப் பெற்று பதிவாளர்கள் பணிகளை தொடங்க உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும்,திருவள்ளுவர்,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காகிதமில்லா செமஸ்டர் தேர்வுகளை நடத்தவும் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.அதன்படி,வரும் செமஸ்டர் தேர்வுகளிலேயே 20% தேர்வை காகிதமில்லா முறையில் நடத்தவும் … Read more

#BREAKING: செப்டம்பர் 11ம் தேதி இனி மகாகவி நாள் – முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் தேதி இனி ஆண்டுதோறும் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப்போட்டி நடத்தி பாரதி இளம் கவிஞர் விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவுநாளையொட்டி முதலமைச்சர் முக ஸ்டாலின் 14 முக்கிய அறிவுப்புகளை வெளியிட்டுள்ளார். … Read more

‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ!’ மகாகவி பாரதியார்-137வது பிறந்த தின சிறப்பு பகிர்வு!

மகாகவி பாரதியாரின் 137வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  தமிழ் இலக்கியவாதி, தமிழாசிரியர், விடுதலை போராட்டவீரர், பத்திரிக்கையாளர் என தமிழுக்கும் தாய் நாட்டிற்கும் பலவகையில் சேவையாற்றியுள்ளார்.  1882 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி – இலக்குமி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் சுப்பிரமணியன். 1897ஆம் ஆண்டு செல்லம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இளம் வயதிலேயே கவிபாடும் திறன் பெற்றிருந்தார். தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் பல தமிழ் கவிதைகள், இலக்கியங்கள் என பல படைப்புகளை எழுதியுள்ளார். எட்டப்ப நாயக்கர் … Read more

யாருக்கும் அஞ்சோம்!எதற்கும் அஞ்சோம்!எனக்கூறிய மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று!

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 135 ஆவது பிறந்ததினம். சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். … Read more