நிபா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கையாக தனி வார்டு அமைத்துள்ள மதுரை அரசு மருத்துவமனை…!

நிபா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கையாக தனி வார்டு அமைத்துள்ள மதுரை அரசு மருத்துவமனை. கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிறுவன் ஒருவன் உயிரிழந்ததை தொடர்ந்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைத்து மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நீபா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு வார்டு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மதுரையில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனிமைப்படுத்தும் பகுதி சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை எச்ஓடி மருத்துவரான … Read more

நிபா வைரஸ் கொரோனாவை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் – அமெரிக்க நோய் தடுப்பு மையம்!

கொரோனாவை விட நிபா வைரஸ் அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.  கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில், கேரள மாநிலத்தில் மிகப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் சில பகுதிகளிலும் நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்கு சென்ற மத்திய குழுவினர் அங்கிருந்த பழங்களின் மாதிரிகளை சேகரித்து, தொடர்ச்சியாக இது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், … Read more

கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் அறிகுறி..!

கேரளாவில் மீண்டும் இரண்டு பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  கேரளாவில் இன்று காலை 5 மணியளவில் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் நிபா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளான். நான்கு நாட்களுக்கு முன்பு இந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தான். சனிக்கிழமை இவனது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. மேலும், இவனது மாதிரிகள் புனே தேசிய கிருமியியல் மையத்திற்கு நேற்று முன் தினம் அனுப்பப்பட்டது. இதில் இவனுக்கு நிபா … Read more

நிபா வைரஸ் தாக்கம்: கேரளாவுக்கு விரைந்த மத்தியக்குழு..!

நிபா வைரஸ் தாக்கத்தால் தேசிய நோய் தடுப்பு மையத்தின் குழுவை கேரளாவுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. கொரோனா வைரஸ் தாக்கம் பல்வேறு மாநிலங்களை பெருமளவு பாதித்து வருகிறது. இருந்தபோதிலும் கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் உள்ளது. அதன் காரணத்தால் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகமான அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் ஒரு சிறுவன் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா … Read more

ஓடியது நிபா வைரஸ்.! மூடப்பட்டிருந்த பள்ளிகள் 12-ம் தேதி திறப்பு! அரசு உத்தரவு..!

கேரள மாநிலம், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை, நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 17 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்த கோழிக்கோடு மாவட்டத்தில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் திறப்பதை 12-ம் தேதி வரை அம்மாநில அரசு ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், வரும் 12-ம் தேதி கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளிகள் … Read more

கேரளாவில் நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- முதலமைச்சர் பினராய் விஜயன் தகவல்..!

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. நிபா வைரஸ் நோய் பாதித்து நர்சு, ஆட்டோ டிரைவர் உள்பட 18 பேர் பலியானார்கள். இதனால் கேரளா முழுவதும் பெரும்பீதி ஏற்பட்டது. நிபா வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க கோழிக்கோடு மாவட்டத்திற்கு செல்வதையே மக்கள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டது. அங்குள்ள மக்கள் தெருக்களில் முக கவசம் அணிந்து நடமாடினர். நிபா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறப்பு … Read more

கேரளவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்:பழந்தின்னி வௌவால்களால்..! பரவவில்லை என முதற்கட்ட ஆய்வில் தகவல்..!!

கேரள மக்களை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ், பழந்தின்னி வௌவால்கள் மூலம் பரவவில்லை என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலம், மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய, மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழு, அந்தப் பகுதிகளில் முகாமிட்டு மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன. கோழிக்கோடு மாவட்டத்தில் மூசா என்பவருக்குச் சொந்தான கிணற்றில் இருந்த வௌவால்கள் மூலம்தான் நிபா வைரஸ் பரவியதாக கூறப்பட்டது. இதையடுத்து … Read more

நிபா வைரஸ்: புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – கிரன்பேடி..!!

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்காணிக்கப்படுவதாகவும், நிபா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருவதாகவும் புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரன்பேடி தெரிவித்துள்ளார். கேரளாவில் நிபா வைரஸ் தாக்கத்தால் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழத்தனர். இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிபா வைரஸ் குறித்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்துவருவதாகவும், புதுச்சேரிக்கு வரும் கேரள சுற்றுலா பயணிகள் கண்காணிக்கப்படுவதாகவும், அனைத்து மருத்துவக்கல்லூரி, பொது மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார … Read more