ஆந்திர பிரதேசம் : பிளாஸ்டிக் பை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து…!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிளாஸ்டிக் பை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள விஜயவாடா நகருக்கு அருகே உள்ள கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் மண்டலத்தில் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, கிருஷ்ணா மாவட்டம், தெம்பள்ளியில் உள்ள பிளாஸ்டிக் பை தயாரிக்க கூடிய நிறுவனமான விஜயா பரிசில் தீவிபத்து ஏற்பட்டு … Read more

#Breaking : கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…!

கோவில்பட்டியிலுள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  கோவில்பட்டியிலுள்ள வள்ளுவர் நகர் பகுதியில் இயங்கி வந்த தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் இன்று மதியம் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அந்த தொழிற்சாலையில் பணியாற்றிய ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் இயந்திரங்கள் இந்த தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவ்விடத்திற்கு … Read more

சென்னையில் பிரபல நகை கடையில் தீ விபத்து…!

சென்னையில் பிரபல நகை கடையில் தீ விபத்து. சென்னை பாரிமுனையில் உள்ள பாத்திமா என்ற பிரபல நகைக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதனையடுத்து, உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் வெளியே ஓடி  வந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது. தகவலறிந்து சமத்துவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், இந்த தீவிபத்து குறித்து போலீசார் விசாரணைய மேற்கொண்ட நிலையில், முதற்கட்ட … Read more