பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

கள்ளகுறிச்சி மாவட்டம்  சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி  படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. காவல்துறையினர் மீது கல்வீச்சு காவல்துறையின் வாகனம்  மற்றும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போராட்டக்கார்கள் அடித்து நொறுக்கி தீவைத்தனர் . இந்நிலையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இச்சம்வம் குறித்து பொதுமக்களிடம் வேண்டுகோள்விடுத்து டிவீட் செய்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து … Read more

அண்ணனுடன் தனுஷ் – இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!

விவாகரத்துக்கு பின்னதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருமே தங்கள் வேலைகளில் தனித்தனியாக பிசியாக இருந்து வருகின்றனர். நடிகர் தனுஷ் படப்பிடிப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது தனுஷ் தனது அண்ணனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் 4-ஆம் ஆண்டு நினைவு தினம்…! சீமான் ட்வீட்…!

சமூக நீதிக்கு எதிரான ‘நீட்’ தேர்வுமுறையை ஒழிக்க சட்டத்தின் வழிநின்று் போராடி, கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவைப் போற்றுவோம். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்த மாணவி தான் அனிதா. சிறுவயதிலேயே தனது தாயை இழந்த இவர் அவரது தந்தையான சண்முகத்தின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். அவரது தந்தை ஒரு கூலித்தொழிலாளி. படிப்பில் மிகவும் கெட்டிக்காரியாக விளங்கிய அனிதா பத்தாம் வகுப்பில் 478 மதிப்பெண்களும், 12-ஆம் வகுப்பில் … Read more

நான் நினைத்தது நடந்தே விட்டது – மார்பிங் புகைப்படங்கள் குறித்து பிரணாப் மகள் ட்வீட்..!

புதுடெல்லி: நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சம்மதித்தபோதே கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பிரணாப் முகர்ஜியின் மகளான சர்மிஸ்தா முகர்ஜியும் அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரின் கருப்பு தொப்பி அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது போலவும், கைகளை நெஞ்சுக்கு நேராக வைத்து மரியாதை செலுத்தியது போலவும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் … Read more