அனுமதியின்றி யாருடைய நிலமும் டிட்கோ தொழிற்பூங்காவுக்காக கையகப்படுத்தபட மாட்டாது.! எம்.பி ஆ.ராசா உறுதி.!

டிட்கோ தொழிற்பூங்காவுக்காக யாருடைய விவசாய நிலத்தையும் தமிழக அரசு கையகபடுத்தவில்லை. – திமுக எம்பி ஆ.ராசா.  கோவையில் அமையவுள்ள டிட்கோ தொழிற்பூங்காவுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாக கேள்வி எழுந்தது. இதற்காக சில அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக திமுக எம்பி ஆ.ராசா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அதில், யாருடைய விவசாய நிலத்தையும் தமிழக அரசு கையகபடுத்தவில்லை. அதற்கான அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும். என கூறினார். விவசாய நிலங்களை அவர்கள் அனுமதியின்றி … Read more

புறம்போக்கு நிலங்கள்:நில உரிமை மற்றும் இரயத்துவாரி என மாற்றம்;9 பேர் கொண்ட குழு அமைப்பு – அரசாணை வெளியீடு!

அரசு மற்றும் டான்சிட்கோ புறம்போக்கு நிலங்களை,நில உரிமை மாற்றம் மற்றும் இரயத்துவாரி என மாற்றம் செய்து முடிவெடுக்க அதிகாரமளிக்கப்பட்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத் (டான்சிட்கோ) தொழிற்பேட்டைகளில் உள்ள அரசு புறம்போக்கு என வகைப்பாடு கொண்ட நிலங்களை நில உரிமை மாற்றம் மற்றும் இரயத்துவாரி என வகைபாடு மாற்றம் செய்து முடிவெடுத்திட அதிகாரமளிக்கப்பட்ட குழு (Empowered Committee) அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. … Read more