பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்…இதனை பின்பற்றுங்கள் – போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!

நிர்பயா பாதுகாப்பு நகர திட்டத்தின் கீழ் மாநகர போக்குக்குவரது கழகங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 2,500  பேருந்துகளில் சிசிடிவி கேமரா,அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக அதில் 500 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொளி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். பேருந்தில் பயணிக்கும் போது ஏதாவது பிரச்சனை என்றால்,அவசர அழைப்பு பொத்தானை அழுத்தினால்,நேரடியாக கட்டுப்பாடு அறையில் ஒலி எழுப்பும்,இதன் மூலம் பெண்களுக்கோ அல்லது குழந்தைகளுக்கோ பிரச்சனை என்றால்,அருகில் … Read more

#BREAKING: சிசிடிவி கேமரா அகற்ற நான் சொல்லவில்லை- ஓ.பன்னீர்செல்வம் ..!

நான் அப்போலோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிசிடிவி கேமரா அகற்ற நான் சொல்லவில்லை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று காலை 11.40 மணிக்கு தொடங்கிய விசாரணை 2 மணி வரை முதற்கட்டமாக நடைபெற்றது. இந்த 2 மணி நேரத்தில் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். பின்னர், … Read more

#Breaking:எம்ஜிஆர் சிலை சேதம் – காவல்துறை அதிரடி!

தஞ்சை:எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தியது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சேகர் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சை வடக்கு வீதியில் உள்ள மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக கட்சி நிறுவனருமான எம்ஜிஆர் அவர்களின் இரண்டடியிலான திருவுருவச் சிலை மர்ம நபர்களால் இன்று சேதப்படுத்தப்பட்டிருந்தது.இதற்கு,அதிமுக இணை ஒருங்கிணப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக பிரமுகர்கள்,அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையில்,இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து,சிலையை சேதப்படுத்திய … Read more

உலகிலேயே டெல்லி தான் நம்பர்; லண்டன் 2-வது இடம் – முதல்வர் கெஜ்ரிவால் பெருமிதம்…!

ஒரு சதுர கிலோமீட்டருக்கு அதிகபட்ச சிசிடிவி கேமராக்கள் உள்ள நகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உலகம் முழுவதும் ஒரு சதுர கிலோமீட்டருக்கு அதிகபட்ச சிசிடிவி கேமராக்கள் உள்ள 150 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் டெல்லி முதல் நகரமாக உள்ளது. டெல்லியில் ஒரு சதுர மைலுக்கு 1,826 சிசிடிவி கேமராக்கள் உள்ளன என்று முதல்வர் மேலும் கூறினார். ஒரு சதுர மைலுக்கு … Read more