சீனாவில் அதிகரிக்கும் கொரோனா.! கோவிட்ஷீல்டு நிறுவன தலைமை நிர்வாகி வேதனை.!

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புகள் பற்றிய செய்தி உண்மையில் வேதனை அளிக்கிறது.- கோவிஷீல்டு தயாரிப்பு  நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி. அண்டை நாடான சீனாவில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் அந்த நாட்டில் தற்போது மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் துவங்கியுள்ளன. மேலும், சில நாடுகளில் இதே போல கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசிகளில் முக்கியமான ஒன்றான கோவிஷீல்டு தயாரிப்பு  நிறுவனம் செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் … Read more

#BREAKING : கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி விலை குறைப்பு…!

தனியார் மருத்துவமனைக்கான கொரோனா தடுப்பூசியின் விலையை சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் குறைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கான கொரோனா தடுப்பூசியின் விலையை சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் குறைத்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸின் விலையை ரூ.600லிருந்து, … Read more

கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த இத்தாலி..!

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு இத்தாலி ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்றுப்பரவல் வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி உலக நாடுகளிடையே தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்று ரோமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளதாவது, கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை இத்தாலி அங்கீகரித்துள்ளதாகவும், தடுப்பூசி செலுத்திய மக்கள் கிரீன் பாஸுக்கு தகுதியுடையவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. இத்தாலி உட்பட தற்போது மொத்தம் 19 ஐரோப்பிய யூனியன் நாடுகள் கோவிஷீல்டிற்கு அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், … Read more

குட்நியூஸ்…கோவிஷீல்டுக்கு அங்கீகாரம் அளித்த இங்கிலாந்து அரசு…!

இங்கிலாந்து அரசாங்கம் கோவிஷீல்டை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இங்கிலாந்தில் தற்போது ‘சிவப்பு’, ‘அம்பர்’ மற்றும் ‘பச்சை’ பட்டியலில் நாடுகளைக் குறிக்கும் ஒரு அமைப்பு உள்ளது.அவை ‘அம்பர் பட்டியலில்’ இந்தியாவை வைத்துள்ளது. இதனால்,இங்கிலாந்திற்கு வருவதற்கு 10 நாட்களுக்கு முன்பு ஒரு நபர் ‘அம்பர் பட்டியல்’ நாட்டில் இருந்திருந்தால், அவர் இங்கிலாந்துக்குச் செல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு கொரோனா வைரஸ் சோதனை எடுக்க வேண்டும்.மேலும்,ஒரு பயணி எதிர்மறை கொரோனா பரிசோதனை சான்று இல்லாமல் வந்தால்,அவருக்கு 500 … Read more

கோவிஷீல்டு தடுப்பூசியின் கால அளவு குறைக்கப்படுகிறதா?

கோவிஷீல்டு தடுப்பூசியின் கால இடைவெளி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ராஜெனெகா இணைந்து தயாரித்த தடுப்பூசியை இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்தது. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியின் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலம் தற்போது 84 நாட்களாக உள்ளது. ஆனால், இந்த தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் அமலுக்கு வந்தபோது இதன் இடைப்பட்ட … Read more