#Breaking : ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு மத்திய அரசு நிபந்தனை.!

ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை யாத்திரையில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணமாக பாரத ஒற்றுமை யாத்திரிறையை மேற்கொண்டு வருகிறார். தற்போது இந்த நடைபயணம் ராஜஸ்தானில் தொடர்ந்து வருகிறது. அண்டை நாடுகளில் கொரோனாவின் தாக்கம் உருவெடுத்து வருவதன் காரணமாக மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற கேட்டுக்கொண்டது. தற்போது அதே போல, ராகுல் காந்தி மேற்கொள்ளும் … Read more

கொரோனா கட்டுப்பாடு இப்போது தான் நீங்கியது.? 2.5 வருடம் கழித்து சென்னையில் மீண்டும் தொடங்கிய விமான சேவை.!

சென்னை முதல் யாழ்ப்பாணம் வரையிலான விமான சேவை இன்று முதல் துவங்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விதிக்கப்பட்ட தடைகள் பெரும்பாலும் நீங்கி விட்டாலும், விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கட்டுப்பாடுகள் இன்னும் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த ஒரு சில கட்டுப்பாடுகளும் தற்போது நீங்கி வருகின்றன. அந்த கட்டுப்பாடுகள் நீங்கும் போதுதான் கொரோனா கட்டுப்பாடு என்பதே நமக்கு நியாபகம் வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இரண்டரை வருடம் தடைப்பட்டு இருந்த சென்னை முதல் யாழ்ப்பாணம் … Read more

#BREAKING: பிப்.15-ஆம் தேதி வரை இவற்றுக்கெல்லாம் கட்டுப்பாடுகள் விதிப்பு – தமிழக அரசு

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட வரும் 1 முதல் 15 வரை கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நீக்கப்படுவதாகவும், வரும் ஞாயிறு (ஜன 30) முழு ஊரடங்கு கிடையாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில், பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி … Read more

#BREAKING: குடியரசு தின விழா – பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு!

குடியரசு தின விழாவை பள்ளி மாணவர்கள், குழந்தைகள் மூத்த குடிமக்கள் மற்றும் பார்வையாளர்கள் காண நேரில் வர வேண்டாம் என தமிழ்நாடு அரசு உத்தரவு. நாடு முழுவதும் நாளை 73-வது குடியரசு தினம் விழா கொண்டாடப்படவுள்ளது. இதனால் நாட்டில் பாதுகாப்பு மற்றும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியக் குடியரசு … Read more

#BREAKING: தமிழ்நாட்டில் ஜன.10 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – முதலமைச்சர் உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின். தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் ஒமைக்ரான் தொற்றும் வேகமாகப் பரவி வருகிறது. இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் முக்கிய துறைகளின் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு … Read more

திருப்பதியில் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கு அனுமதி…!

இன்றுமுதல் திருப்பதியில் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கு அனுமதி. திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக, இலவச சுவாமி தரிசனம் நடைமுறை கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, இலவச தரிசனத்திற்கு கடந்த 8-ஆம் தேதி முதல் கிட்டூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டும், நாள்தோறும் 2,000 டோக்கன்படி வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளதால், இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனைத்து பக்தர்களுக்கும் டோக்கன் … Read more

5 மாதங்களுக்கு பின் முதுமலை சுற்றுலா மையம் இன்று திறப்பு…!

நீலகிரியில் உள்ள முதுமலை சுற்றுலா மையம் இன்று முதல் திறப்பு.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, தமிழகம் முழுவதும்  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. … Read more

கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் – மத்திய அரசு!

கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை ஒழிக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்தாலும், கேரள மாநிலத்தில் மட்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 30 … Read more