கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவா் ச.இராமநாதன் அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.இதனையடுத்து,அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,ஈடுசெய்ய முடியாத ச.இராமநாதன் அவர்களது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக,வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் முதல்வர் கூறியிருப்பதாவது: “கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், இந்நாள் தலைவருமான, கரந்தைத் தமிழ்ச் செம்மல் ச.இராமநாதன் வயது மூப்பு காரணமாக […]