கேரளாவில் சாலைக்கு நடுவே குட்டி ஈன்ற யானை-வரிசையில் காத்துநின்ற வாகனங்கள்..!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மரையூர் அருகே உள்ள சாலையில் யானை ஒன்று குட்டி ஈன்றுள்ளது. கருவுற்ற யானை ஒன்று பிரசவ வலியில் மரையூர் சாலையில் பிளிறியப்படி வந்துள்ளது. அதனை கண்ட வாகன ஓட்டிகள் தொலைதூரத்திலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு அமைதி காத்துள்ளனர்.

யானையும் 1 மணி நேரமாக பிரசவ வலியில் பிளிறியப்படி இருந்துள்ளது. பின்னர் சாலைக்கு நடுவே யானை குட்டியையும் ஈன்றுள்ளது. பிறகு குட்டியை தழுவிக்கொண்டு அதனை எழுந்து நிற்க வைத்து பின்னர் காட்டுக்குள் திரும்பி சென்றுள்ளது.

சுமார் 1 மணி நேரமாக நடைபெற்ற யானையின் சத்தம் நடுவே எந்த வாகனத்தின் சத்தமும் கேட்கவில்லை. அவ்வளவு நேரமும் வாகனங்கள் வரிசையாக யானைக்காக காத்துக்கொண்டு சத்தம் எழுப்பாமல் இருந்துள்ள மனிதநேய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

யானை படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா.? மிரண்டு போன தமிழ் சினிமா.!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “யானை”.இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். ட்ரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, சரண்யா ரவி, யோகி பாபு, அம்மு அபிராமி, விஜய் டிவி புகழ், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்கள். குடும்ப கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ஹரியின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை 1-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு விமர்சனரீதியாவும், வசூல் ரீதியாகவும் படத்திற்கு மிகவும் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், படம் வெளியன் 4 நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் மட்டும் இந்த படம் 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். உலகம் முழுவதும் 16 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பின்வாங்கிய அருண் விஜயின் யானை .., புதிய ரிலீஸ் தேதி இதோ…!

Elephant

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் யானை. இந்த படம் வருகிற மே மாதம் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பட வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விநியோகஸ்தர்களின் வேண்டுகோளின் பேரில் வெளியீட்டு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் 17ஆம் தேதி முதல் திரையரங்குகளில் யானை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாவில் மதம் பிடித்த யானை-பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்..!

கேரளா மாநிலம் திருச்சூர் ஆராட்டுபுழா கோயில் திருவிழா சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. இந்த திருவிழாவில் 3 யானைகள் கொண்டுவரப்பட்டு சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தன. இந்த யானைகளில் திடீரென ஒரு யானை மதம் பிடித்து மற்றொரு யானையை முட்டியது. இதனால் மற்ற 2 யானைகளும் மிரண்டு வெவ்வேறு திசைகளில் ஓடியதால் திருவிழாவிற்கு கூடியிருந்த பொதுமக்களும் பயந்து  அலறியடித்து ஓடத்தொடங்கினர்.

பயந்து ஓடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர்  குழிகளுக்குள் விழுந்து படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து ஆக்ரோஷமாக காணப்பட்ட யானைகளை பாகன்கள் கடும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு  சமாதானப்படுத்தினர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை போலீசார் யானைக்கு மதம் பிடித்ததற்கான காரணம் குறித்தும் யானை முறையான மருத்துவ பரிசோதனைக்கு பின்பு தான் கோயில் திருவிழா நிகழ்வுக்கு கொண்டு வரப்பட்டதா..? என்றும் அதற்கான மருத்துவ சான்றிதழ்கள் உள்ளதா..? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஸ்கரில் யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு..!

elephant

சத்தீஸ்கர் மாநிலத்தில் காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தம்தாரி மாவட்டத்தில் காட்டு யானை ஒன்று வயதான மூதாட்டியை (61 வயது) தாக்கியுள்ளது. இது குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரி, இந்த மூதாட்டி சிங்பூர் வனப்பகுதிக்கு அருகில் உள்ள பலுச்சுவா கிராமத்தில் வசிப்பவர்.

நேற்று இரவு இந்த மூதாட்டி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் கோபத்தோடு வனப்பகுதி நோக்கி சென்றுள்ளார். அங்கு காட்டு யானை தாக்கியதில் அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

#Breaking : கோவையில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு ….!

elephants

கோவையில் ரயில் மோதி 2 குட்டி யானைகள் உட்பட மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

கோவை மதுக்கரை அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க யானைகள்  முயற்சித்துள்ளன. அப்பொழுது கேரளாவில் இருந்து வந்த ரயில் ஒன்று யானைகள் மீது மோதி உள்ளது. இதில் 2 குட்டி யானைகள் உட்பட 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

யானை மீட்கும் பணி : படகு கவிழ்ந்ததில் செய்தி தொடர்பாளர் பலி!

யானை மீட்கும் பணியை ஒளிப்பதிவாக்க சென்றிருந்த பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் படகு கவிழ்ந்தால், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் எனும் பகுதியின் அருகில் உள்ள மகாநதியில் கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளம் கரைபுரண்டு ஓடியுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நதியின் நடுப்பகுதிக்கு சென்று மீண்டும் கரைக்கு வர முடியாமல் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளது.

இதனை அடுத்து ஒடிசா பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சக்திவாய்ந்த விசைப்படகில் விரைந்த  மீட்புப்படையினர் யானையை நதிக்குள் சென்று விரட்டினால் மறு கரைக்குச் சென்று விடும் என திட்டமிட்டு சென்றனர். அப்போது பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் அரிந்தம் தாஸ் என்பவரும் புகைப்பட கலைஞர்கள் சிலரும் சென்றனர்.

ஆனால், நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் படகு தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது. இதனை அடுத்து படகில் இருந்த அனைவரையும் மீட்க, அடுத்த மீட்பு படையினர் விரைந்து சென்றுள்ளனர். மீட்பு படையினர் 3 பேரையும் அரிந்தம் தாஸ் மற்றும் புகைப்பட கலைஞர்களையும் மீட்பு உள்ளனர்.

இவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், செய்தி தொடர்பாளர் அரிந்தம் தாஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் புகைப்பட கலைஞருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் கட்டாக் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பேருந்து கண்ணாடியை உடைத்த காட்டுயானை..!பயணிகளின் திக் திக் நிமிடங்கள்..!வீடியோ

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த காட்டு யானையின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது மேல்தட்டப்பள்ளம் என்ற இடத்தில் காட்டு யானை ஒன்று அரசு பேருந்தை வழிமறித்துள்ளது. இதனால் செய்வதறியாது, ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி இயக்கியுள்ளார்.

இதன் பின்னர் பேருந்தை நோக்கி காட்டு யானையும் வேகமாக துரத்தி வந்துள்ளது. துரத்தி வந்த காட்டு யானை பேருந்தின் முன்பக்க கண்ணாடியை தனது தந்ததால் குத்தி உடைத்துள்ளது. இதனால் அந்த பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் யானையை கண்டு பயந்து நடுங்கியுள்ளனர்.

ஆனால், ஓட்டுநர் அந்நேரத்தில் பயப்படாமல் பேருந்தை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு இருந்துள்ளார். இதன் பின்னர் காட்டுயானையும் அங்கிருந்து சென்றுள்ளது. இந்த காட்சிகளை பேருந்தின் உள்ளே இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

நிலக்கடலை தோட்டத்திற்குள் புகுந்த யானை தாக்கி 2 விவசாயிகள் உயிரிழப்பு…!

elephant

கிருஷ்ணகிரியில் நிலக்கடலை தோட்டத்திற்குள் புகுந்த யானை தாக்கியதில், இரவு நேர காவலுக்கு நின்ற இரண்டு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி எனும் பகுதியில் உள்ள வனப்பகுதியில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் சிலர் அண்மையில் உயிரிழக்கவும் நேரிட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிகரலப்பள்ளி எனும் கிராமத்தை சேர்ந்த, 30 வயதுடைய சந்திரன் மற்றும் நேரலகிரி எனும் கிராமத்தை சேர்ந்த 50 வயதுடைய நாகன் ஆகியோர் கிராமத்திற்கு அருகிலுள்ள அவர்களது நிலக்கடலை தோட்டத்திற்கு நேற்று இரவு காவலுக்காக சென்றுள்ளனர்.

இன்று காலை அவர்கள் வீடு திரும்பாத நிலையில், அவர்களது உறவினர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்த பொழுது, இருவரும் யானை தாக்கி உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கர்நாடக வனப்பகுதியில் இருந்து சிகரலப்பள்ளி வழியாக இந்த யானைகள் வந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் யானை தாக்கி இருவர் பலி..!

death

கேரள மாநிலம் திரிச்சூரில் யானை தாக்கியதில் இருவர் பலியாகியுள்ளனர்.

திரிச்சூரில் உள்ள பலப்பிள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சைனுதீன்(50). இவரை நேற்று இரவிலிருந்து காணவில்லை என்பதால் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இவரது உடல் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள கணபதி கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதேபகுதியை சேர்ந்த மேலும் ஒரு நபரான பீதாம்பரம் விடியற்காலை 5.30 மணியளவில் வீட்டை விட்டு கிளம்பியுள்ளார்.

ரப்பர் தொழிலாளியான இவர் 6.30 மணியளவில் ரப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த இருவரின் அடையாளங்களை வைத்து இவர்கள் யானை தாக்கி இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.