முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை சீராக உள்ளது – எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்..!

1998 முதல் 2004ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய்(வயது 93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை.
வாஜ்பாயின் உடல்நிலை, நேற்று மதியம் மோசமடைந்தது. இதனால், அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், வாஜ்பாயின் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவர், முழுவதுமாக குணமடையும் வரை மருத்துவமனையிலேயே இருப்பார் எனவும், தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன