#Goodnews:இவர்களுக்கு மீண்டும் பணி;ஊதியம் ரூ.5,000-7,500 வழங்க முடிவு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதலைமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விளக்கம் அளித்து வந்தார்.அப்போது முதல்வர் கூறுகையில்: “மாநிலத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் உள்ள வேலை உறுதித்திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் என்ற பணிக்கு விருப்பம் தெரிவிக்க கூடிய முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த பணி வழங்க வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள … Read more

முதல்வர் குறித்து அவதூறு பேசிய பாஜக நிர்வாகி கைது..!

முதல்வர் முக ஸ்டாலினை அவதூறாக பேசிய பாஜக பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரச்சார அணித் தலைவர் தான் ஜெயபிரகாஷ். இவர் முதல்வர் முக ஸ்டாலின் அவதூறாக பேசியதாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இதனை அடுத்து இரணியலில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் ஜெயபிரகாஷை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

அடடா…ரூ.310 கோடியில் 9 பாலங்கள் – திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.310.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.4.2022) தலைமைச் செயலகத்தில்,நெடுஞ்சாலைத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம்,கோயம்புத்தூர். மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 310 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆறு இரயில்வே மேம்பாலங்கள்,ஒரு இரயில்வே கீழ்ப்பாலம், ஒரு உயர்மட்டப் பாலம் மற்றும் ஒரு பல்வழிச் சாலை மேம்பாலம் ஆகிய ஒன்பது … Read more

முக்கிய அரசியல் புள்ளியின் மருமகன் மறைவு – முதல்வர் இரங்கல்!

தூத்துக்குடி:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.அழகுமுத்து பாண்டியன் அவர்களின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஐயா அவர்களின் மருமகனும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான எஸ்.அழகுமுத்து பாண்டியன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.இதனையடுத்து,அவரது மறைவுக்கு சிபிஐ கட்சியினர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கோவில்பட்டியில் இன்று மாலை 4 மணிக்கு மறைந்த எஸ்.அழகுமுத்து பாண்டியன் அவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெறுவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,இந்திய … Read more

10 ஆண்டுகளுக்கு பிறகு…பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!

விழுப்புரம்:கொழுவாரியில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொழுவாரி கிராமத்தில் ரூ.3 கோடியில் 100 வீடுகளுடன் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சற்று முன்னர் திறந்து வைத்து பயனாளிகளுக்கு வீட்டுச் சாவியை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து,பெரியார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் சமத்துவபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டார். இதனிடையே,சமத்துவபுரத்தில் கலைஞர் பூங்கா,விளையாட்டு திடல் உள்ளிட்டவைகளை திறந்து வைத்த முதல்வர் வாலிபால் விளையாடினார்.தமிழகத்தில் … Read more

டெல்லி பயணம் நிறைவு – தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:டெல்லி பயணத்தை முடித்து விட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேற்று இரவு சென்னை திரும்பினார். டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில்,பிரம்மாண்டமாக திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும்,முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்கள்,3 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். மோடியை சந்தித்த முதல்வர்: பின்னர்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நீட் விலக்கு,மேகதாது அணை விவகாரம்,இலங்கை தமிழர்களுக்கு நேரடியாக உதவ அனுமதி … Read more

டெல்லி பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வர் – செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்..!

பல்வேறு பணி சுமைகள் இருந்தாலும் உடல்நலத்தின் மீது அக்கறை கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது உடற்பயிற்சி, நடை பயிற்சி மற்றும் சைக்கிளிங் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தை திறப்பதற்காக நான்கு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் டெல்லி சென்றுள்ளார். அங்கு முதல்வர் இன்று காலை டெல்லி நேரு பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். முதல்வரை பூங்காவில் கண்ட பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர். இது … Read more

டெல்லியில் திமுக புதிய அலுவலகம் – இன்று திறந்து வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

டெல்லி:மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில்,பிரம்மாண்டமாக திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும்,முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்கள்,3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். தலைவர்களுக்கு அழைப்பு: இதனையடுத்து,பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து திமுக அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் … Read more

#Breaking:பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

டெல்லி:பிரதமர் மோடியை,அவரது அலுவலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது நேரில் சந்தித்துள்ளார். திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமரை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.அந்த வகையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்றம் வருகை தந்தார். சந்திப்பு: நாடாளுமன்றம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக உறுப்பினர்கள் வரவேற்றனர். இந்நிலையில்,நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள  அலுவலகத்தில்பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்துள்ளார். பிரதமரிடம் முதல்வர் பேச்சுவார்த்தை: … Read more

பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!

டெல்லி:தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,இன்று மதியம் 1 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார். சர்வதேச முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அதிகாலை சென்னை வந்தடைந்தார். டெல்லி புறப்பட்ட முதல்வர்: இதனைத்தொடர்ந்து, டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுகவின் அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய கட்டடத்தின் திறப்பு விழா வரும் 2-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more