மாத ஓய்வூதியத் தொகையை உயர்த்த மத்திய அரசு முடிவு ..!

அடல் பென்ஷன் திட்டத்தில் ஓய்வூதியத் தொகையை மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் அடல் பென்ஷன் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.

அதன்படி, சிறிய அளவில் ஆண்டுதோறும் பிரீமியம் செலுத்தும் தொழிலாளர்களுக்கு 60 வயதுக்குப் பிறகு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாத ஓய்வூதியத்தை 10 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.