மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை..!

9 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில்  தந்தைக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. தண்டனையை உறுதி செய்ய வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அனுப்பப்பட்டது.

அப்போது 3 ஆண்டுக்கு பிறகே மாரிமுத்துவை கைது செய்து போலீஸார் வாக்குமூலம் பெற்றதாகவும், மகளை மடியில் போட்டு அவர் அழுதுகொண்டிருந்ததாக சாட்சிகள் தெரிவித்துள்ள நிலையில், பலாத்காரம் செய்து கொலை எனக் கூறுவது நம்பும்படியாக இல்லை என்றும் வாதிடப்பட்டது. இதனை ஏற்று தூக்குத் தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.