பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : 4 இந்திய வீரர்கள் பலி..!

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை அருகே, நள்ளிரவு வேளையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

சம்பா மாவட்டத்தில் ராம்கர், சாம்பிலியல் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ முகாம்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்ததால் விடிய விடிய சண்டை நீடித்தது.

இதில், எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்தனர். 5 வீரர்கள் காயமடைந்திருப்பதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.