நாளை இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை

heavy rain

வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த இரு தினங்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், … Read more

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16,000 கோடி முதலீடு..!

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு  நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடர்ந்து பல்வேறு வகையான முதலீடுகள் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டின் மூலம் 5 லட்சம்  கோடி முதலீடுகள் ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி வியட்நாம் நாட்டின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான  வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் தனது ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த மின்சார … Read more

தூத்துக்குடியில் நிவாரண பொருட்கள் வழங்கிய நடிகர் பிரசாந்த்!

prashanth

தென் மாவட்டங்களில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இந்திலையில், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கி வரும் வேளையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வளர்களும் தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து வருகின்றனர். சமீபத்தில், நடிகர் விஜய் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட … Read more

தூத்துக்குடி மாணவர்களே நாளை முதல் அரையாண்டு தேர்வுகள்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Half Yearly Examinations

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பால் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நாளை முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. திங்கள்கிழமையுடன் அரையாண்டுத் தேர்வு விடுமுறை நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை (ஜன.2) இன்று திறக்கப்பட்டது. அரையாண்டு மற்றும் 2-ஆம் பருவத் தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வுகள் ஒரே வினாத்தாள் முறையில் நடத்தி முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அரையாண்டு விடுமுறை … Read more

தூத்துக்குடிக்கு வந்த ரஜினிகாந்த்.! காரணம் என்ன தெரியுமா?

Rajinikanth - Thoothukudi

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும், ‘தலைவர் 170’ படத்திற்கு ‘வேட்டையன் ‘என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை ஜெய்பீம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனும் நடிக்கிறார். மேலும், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். வித்தியாசமான … Read more

நாளை மறுநாள் தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்ளும் மத்திய நிதியமைச்சர்..!

Nirmala Sitharaman

தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி, ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த  கனமழையால்  குடியிருப்பு பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட  அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. இந்த தொடர் கனமழை எதிரொலியாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பில் இருந்து  தற்போது நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள்  மீண்டுவரும் நிலையில், ஒருசில இடங்களில்  மழைநீர் வடியாமல் உள்ளது. மழை நீரை அகற்ற அரசு உரிய நடவடிக்கைகளை … Read more

4 மாவட்ட வெள்ள பாதிப்பால் 31 பேர் உயிரிழப்பு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!

thoothukudi floods Nirmala

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்தும் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி வெள்ள பாதிப்பால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், அனைத்து உதவிகளையும் மத்திய அரசு … Read more

தூத்துக்குடியில் நாளை முதல் ரயில் சேவை தொடக்கம்.!

Southern Railway

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த கனமழையால் பெரும்பாலான சாலைகள் பாதிப்படைந்து பேருந்து செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டது. மேலும், கடும் வெள்ள பாதிப்பால் ரயில்வே பாதைகள் சேதமடைந்தன. இதனால், தென் மாவட்டங்களில் ரயில்சேவை தற்காலியமாக  ரத்து செய்யப்பட்டது. இப்பொது, மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நாளை (டிச.22) முதல் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் தண்டவாளங்களில் நீரை அகற்றும் பணி நடைபெற்று வருவதால் … Read more

தூத்துக்குடியில் சோகம்…அக்கா கண்முன்னே வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த தங்கை-தந்தை.!

Thoothukudi flood death

கடந்த ஞாயிற்று கிழமை முதல் திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்க மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மக்கள் உணவும், தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். மேலும், மூன்று நாட்களுக்கும் மேலாக மின்சரம் இல்லாமல் … Read more

இன்று தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

mk-stalin-1-2

தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி, ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இந்த தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட  அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்ட மக்களுக்கும் வெளி மாவட்டங்களில் இருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில்  மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடர் மேலாண்மை … Read more