நாமக்கல்லில் வேளாண்துறை கண்காட்சி-கருத்தரங்கம் கலெக்டர் தொடங்கி வைத்தார்!

நாமக்கல்லில் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை சார்பில் “வருடம் ஒரு கன்று- கறவைமாடுகளில் கருத்தங்காமை பிரச்சினைகளுக்கான தொழில்நுட்ப மேலாண்மை உத்திகள்” குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது. நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அகிலா அனைவரையும் வரவேற்று பேசினார். கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த 10-க்கும் மேற்பட்ட அரங்குகளை பார்வையிட்டார். கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தீவனங்கள், தீவன … Read more

நாகப்பட்டினத்தில் தமிழக அரசை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்!

ஒகி புயலில் சிக்கிய மீனவர்களை காப்பாற்றாத தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக மீட்க வலியுறுத்தியும் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று ஆர்ப் பாட்டம் செய்வதற்காக பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலும், முன்னாள் பொதுச் செயலாளர் அய்யப்பன் முன்னிலையிலும், நாகை மாவட்ட தலைவர் கோபி மற்றும் பா.ம.க.வினர் சுமார் 10-க்கும் மேற்பட்ட கார்களில் வந்தனர். பின்னர் அவர்கள் நாகை பழைய பஸ் நிலையம் அருகே சென்று … Read more

துரை அருகே வங்கியில் தீ விபத்து!

மதுரை அருகே பேரையூரில் பஸ் நிலையம் எதிரே தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி உள்ளது. இந்த வங்கியில் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) மாலை பணி முடிந்ததும், ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். இந்தநிலையில் நேற்று மாலை 4.50 மணியளவில் வங்கியின் உள்ளே தீப்பிடித்து கரும்புகை வெளியே வருவதாக பொதுமக்கள் பேரையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சார்லஸ் தலைமையில் போலீசாரும், டி.கல்லுப்பட்டி தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து, வங்கியின் கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டு … Read more

கிருஷ்ணகிரி அணையில் பழுது பார்க்கும் பணி தீவிரம்!

கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகில் முதல் ஷட்டர் கடந்த மாதம் 29-ந் தேதி உடைந்தது. இதனால் அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த 51 அடி தண்ணீரில், உடைந்த மதகை சீர் செய்ய அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 19 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதாவது சுமார் 1.40 டி.எம்.சி. தண்ணீர் வெளியேறியது. பின்னர் உடைந்த ஷட்டர் 7 நாட்களுக்கு பின் முற்றிலும் அகற்றப்பட்டது. இதையடுத்து புதிதாக மதகில் ஷட்டர் பொருத்தும் பணி தொடங்கியது. நேற்று 3-வது நாளாக ஷட்டர் … Read more

கரூர் மாவட்டம் அருகே விவசாயிகள் சாலை மறியல்!

கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி பகுதியில் உள்ள போத்துராவுத்தன்பட்டி, பஞ்சப்பட்டி, பாப்பக்காபட்டி, சிவாயம், வயலூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அவர்களின் விளை நிலத்தில் எள் விளைச்சலில் அதிக அளவு மகசூல் கிடைத்தது. இதனால் கடந்த வாரம் கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் தங்களுக்கு எள் மகசூல் அதிக அளவு கிடைத்துள்ளது. இதனால் வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைத்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த … Read more

ஈரோட்டில் அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

தமிழகம் முழுவதும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ–ஜியோ–கிராப் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. அதன்படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேற்று போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட கிளை சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் சோமசுந்தரம், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் நேரு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநில … Read more

திண்டுக்கல் அருகே காட்டெருமைகளின் உடல்கள் கண்டெடுப்பு !இருவர் கைது …

கொடைக்கானல் அருகேயுள்ள செம்பரான்குளம் பகுதியில் தனியார் தோட்டத்தில் காட்டெருமைகளின் உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில், உதவி வனபாதுகாவலர் பாலகிருஷ்ணன், வனச்சரகர் கருப்பையா, தாசில்தார் பாஸ்யம் ஆகியோர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த தோட்டத்தில் சந்தேகப்படும்படியான இடங்களை வனஊழியர்கள் தோண்டினர். அங்கு 3 காட்டெருமைகளின் உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவற்றின் உடல்கள் எலும்பு கூடாக மாறி இருந்தது. இதைத் … Read more

தர்மபுரியில் மீனவர்களை மீட்க கோரி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்!

‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்டு கடலில் மாயமான 500-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க கோரி பா.ம.க. சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாநில துணைபொதுச்செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கட்சியின் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர் செந்தில், உழவர் பேரியக்க மாநில தலைவர் வேலுச்சாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். மாநில துணைத்தலைவர்கள் சாந்தமூர்த்தி, பாடிசெல்வம், அரசாங்கம், மாவட்ட செயலாளர்கள் சண்முகம், இமயவர்மன், சார்பு அமைப்பு நிர்வாகிகள் பெரியசாமி, வணங்காமுடி உள்ளிட்டோர் … Read more

கடலூரில் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு(ஜாக்டோ-ஜியோ கிராப்ட்) சார்பில் கடலூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான ஆனந்ததுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகபாண்டியன் வரவேற்றார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அன்பரசன், குரூப்-2 நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாநில துணை தலைவர் சிவா, அரசு அலுவலக உதவியாளர்கள் மாவட்ட தலைவர் பச்சையப்பன், அரசு வாகன ஓட்டுனர் … Read more

அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்பாட்டம்!

அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், அரியலூர் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைபொது செயலாளர் வைத்தி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சின்னதுரை வரவேற்று பேசினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ரூ.50 லட்சம் தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கண்ணன், செந்தில்குமார் மற்றும் பத்து ஒன்றியங்களை சேர்ந்த அனைத்து அணி … Read more