கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 100% தடுப்பூசி போட இலக்கு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 100% தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு பாராட்டியதாகவும், ஆகஸ்டில் கூடுதலாக தமிழகத்திற்கு 24 லட்சம் தடுப்பூசி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்திற்கு செப்டம்பரில் … Read more

மாநிலங்களின் கையிருப்பில் 4.36 கோடி தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை..!

மாநிலங்களின் கையிருப்பில் 4.36 கோடி தடுப்பூசி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 65,00,99,080 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மாநிலங்கள் கையிருப்பில் 4,36,81,760 டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், மாநிலங்களுக்கு கூடுதலாக 1,20,95,700 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு மற்றும் மாநில … Read more

குடிமகன்களுக்கு கொடுத்த அதிர்ச்சி- மது வாங்க தடுப்பூசி கட்டாயம்..!

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை என நீலகிரி ஆட்சியர் அதிரடி உத்தரவு. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை குறைந்து வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தடுப்பூசியை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முழு அதிகாரத்தை அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பித்தால் மட்டுமே இனி மதுபானம் வழங்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி … Read more

பிலிப்பைன்ஸ்: கொரோனா பரவல் 20 லட்சம் பேர் பாதிப்பு..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா பரவல் காரணத்தால் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 20 லட்சம் பேர் வரை பாதித்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது, கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 20.03 லட்சம் பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை 14,216 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது கொரோனா பாதிப்பு 20,03,955 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொரோனா தொற்றால் இதுவரை பிலிப்பைன்ஸ் நாட்டில் 33,533 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் … Read more

70% பேருக்கு கொரோனா தடுப்பூசி – ஐரோப்பிய யூனியன்..!

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இதுவரை 70% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் அமைப்பு இது குறித்து தெரிவித்துள்ளதாவது, ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளில் இதுவரை தற்போது 70% பெரியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணையத்தலைவர் உர்சுலா வோண்டேர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, தற்போது ஐரோப்பிய யூனியனில் உள்ள 70% பெரியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்டிவிட்டோம். இருந்தாலும் இது போதுமானது அல்ல. இன்னும் அதிகமான நபர்களுக்கு … Read more

இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம்..!-ஹிமாச்சலப்பிரதேசம்..!

இளைஞர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக ஹிமாச்சலப்பிரதேசம் மாறியுள்ளது. இது குறித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஹிமாச்சல் அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ஹிமாச்சல் பிரதேசம் இந்தியாவிலேயே இளைஞர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாறியுள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனை நிகழ காரணமாக இருந்த அனைத்து மாநில நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.  பிரதமர் மோடி … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,941 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 350 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,27,68,880 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 11,968 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,27,68,880 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 350 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் … Read more

1-ஆம் தேதி முதல் சென்னையில் 200 வார்டுகளிலும் 200 தடுப்பூசி முகாம்..!

நாளை மறுநாள் முதல் சென்னையில் உள்ள 200 வார்டிற்கு 1 முகாம் என 200 தடுப்பூசி முகாம்களாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், 1.9.2021 அன்று முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 27.08.2021 முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 28.08.2021 அன்று முதல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு … Read more

மாநிலங்களின் கையிருப்பில் 4.87 கோடி தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை..!

மாநிலங்களின் கையிருப்பில் 4.87 கோடி தடுப்பூசி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 63,09,30,270 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மாநிலங்கள் கையிருப்பில் 4,87,39,946 டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், மாநிலங்களுக்கு கூடுதலாக 21,76,930 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு மற்றும் மாநில … Read more

தனது 120 – வது வயதில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மூதாட்டி – வீடியோ உள்ளே…!

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 120 வயதுடைய மூதாட்டி ஒருவர் தற்பொழுது தனக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்து கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தினை சேர்ந்த தோலி தேவி எனும் 120 வயதுடைய மூதாட்டி ஒருவர் தனக்கான தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்டுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், இளைஞர்கள் பலர் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டு … Read more