மக்களவை தேர்தல்… கூட்டணி குறித்து முக்கிய தீர்மானங்கள்.. பாமக அறிவிப்பு.!

PMK Leader Ramadoss

இன்று சென்னை எழும்பூரில் ராணி மெய்யம்மை அரங்கில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் , பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுகிறதா.? கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா.?  எந்த கட்சியுடன் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில்  முக்கிய தீர்மானத்தை பாமக முக்கிய நிர்வாகி ஜி.கே.மணி கூறினார். பொதுக்குழு … Read more

விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.! தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த பாமக நிறுவனர் ராமதாஸ்.!

கனமழையை காரணம் காட்டி நெல் கொள்முதலை நிறுத்தி வைத்துள்ள நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து மீண்டும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்  தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.   தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழைக்கு முன்னரே காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்துவிட்டது. இதனால் காவிரி டெல்டா பகுதியில் அறுவடைக்கு காத்திருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. மேலும் அறுவடை செய்யப்பட்டு இருந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வருகின்றன. … Read more

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் க்கு கொரோனா தொற்று உறுதி !

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கொரோனா … Read more

“வினாவுக்கு விடை கிடைக்கவில்லை” – பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை!

விடுதிகளில் தங்கியுள்ள தொழிலாளர்கள் அனுபவிக்கும் வேதனைகள் எப்போது தீரும்? என்ற வினாவுக்கு விடை கிடைக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். மனிதர்கள் உண்ணத் தகுதியற்ற உணவு, கால்நடைகளைப் போன்று சிறிய அறையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தங்க வேண்டிய அவலம்,நோய்களை பரப்பக்கூடிய கழிவறைகள் போன்றவை தான் தொழிலாளர்களுக்கான விடுதிகளின் அடையாளங்கள் என்றும்,எனவே, தொழிற்சாலை விடுதிகளில் தரமான உணவு,அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை … Read more

“அதிகரித்த சேதம்;கூடுதல் இழப்பீடு தர வேண்டும்” – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் !

தமிழ்நாட்டில் மழையால் ஏற்பட்ட  பயிர் பாதிப்புகளை மீண்டும் கணக்கிட்டு தமிழக அரசு கூடுதல் இழப்பீடு தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் மழையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதல்ல … Read more

“ஏழைகளுக்கு மிகப்பெரிய வரம்;ஆனால்,லாப வேட்டைக்காடாக வாய்ப்பு”-மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

தமிழகம்:ரயில்கள் தனியார்மயத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இரயில்களை தனியார்மயமாக்கும் முயற்சி தோற்றதாகவே இருக்கட்டும்,மீண்டும் அந்த முயற்சியை மத்திய அரசு தொடங்கக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தெற்கு ரயில்வேத்துறை சார்பில் தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டிலிருந்தும் இயக்கப்படும் 13 விரைவு ரயில்களை தனியார்மயமாக்கும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதன்மூலம் ரயில் சேவையை ஏழை மற்றும் நடுத்தர மக்களிடமிருந்து தட்டிப் … Read more

“ஆசிரியர் சமூகத்திற்கே அவப்பெயர்;நிர்வாகத்தினரை கைது செய்ய வேண்டும்”- பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்!

பாலியல் குற்றங்களை தடுக்காமலும், உடந்தையாகவும் இருந்த பள்ளி நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். இதனை அடுத்து,அவர் அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இந்த நிலையில்,அவர் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, … Read more

“அரசுப்பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கு கருணைத் தொகை, முன்பணம் வழங்க வேண்டும்” – பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை..!

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கருணைத் தொகை, முன்பணம் வழங்க அதிக செலவாகாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு அரசு கருணைத்தொகை,முன்பணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “தமிழக அரசு பள்ளிகளில் மிகக்குறைந்த ஊதியத்துக்கு பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தீப ஒளி திருநாள் கொண்டாட பொருளாதாரம் … Read more

“நீட் தேர்வு மோசடிகளின் கூடாரம்;நேர்மையான மாணவர் சேர்க்கைக்கு நீட் கூடாது” – பாமக நிறுவனர் ராமதாஸ் ..!

நீட் தேர்வு மோசடிகளின் கூடாரமாக மாறியிருப்பது மாணவர்களிடம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை நடப்பாண்டு முதலே ரத்து செய்து விட்டு, 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது: நீட் மோசடி: மராட்டிய மாநிலத்தை மையமாக வைத்து டெல்லியிலும், ஜார்கண்டிலும் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நீட் தேர்வு … Read more

இந்திய அளவிலான சாதனையை தமிழ்நாடு அரசு விரைவில் முறியடிக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்..!

தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதற்கு,தமிழக அரசுக்கு  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படடு வருகிறது.அந்த வகையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில் நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் போலியோ சொட்டு மருத்து போடும் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் நேற்று … Read more