தீவிரமாகும் உள்ளாட்சி தேர்தல் பணிகள்! தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தமிழக உள்ளாட்சி தேர்தல் ஆனது தற்போது விரைவில் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களில் அதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தற்போது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இவர் ஏற்கனவே மாவட்டந்தோறும் அந்தந்த மாவட்ட அதிகாரிகளுடன் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தற்போது முதன்முறையாக அனைத்து கட்சி கூட்டம் மூலம் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை … Read more

இனி மணிக்கணக்கில் டோல்கேட்டில் காத்திருக்க வேண்டியதில்லை! ஞாயிறு முதல் ஃபாஸ்ட்டேக்!

வழக்கமாக இருசக்கர வாகனங்களை தவிர்த்து, இலகு ரக வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள் அனைத்தும் ஒரு நகருக்குள் நுழையும் போது அங்குள்ள டோல்கேட்டில் சிலநேரம் மணிக்கணக்கில் நின்று டோல்கேட் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனை மாற்றுவதற்காக நெடுஞ்சாலை துறை தற்போது புதிய முறையை கொண்டு வந்துள்ளது. ஃபாஸ்ட் டேக் என அழைக்கப்படும் இந்த முறையில் நம் வங்கி கணக்கானது அந்த ஃபாஸ்ட் டேக் கணக்கில் இணைத்துக்கொள்ளபடும். இதற்காக நெடுஞ்சாலைத்துறை 22 வங்கிகளுடன் ஒப்பந்தம் … Read more

பானி பூரி யாருக்கு பிடிக்கும்..அப்போ ஒரு ஆபத்து..!!

‘பானி பூரி’ வட இந்திய தின்பண்டமாக இருந்தது. ஆனால் இப்பொது இந்தியாவில் உள்ளவர்களின் நொறுக்கு தின்பண்டங்களில் ஒன்றாக பானி பூரி இடத்தைபிடித்துள்ளது. தமிழகத்தில் எல்லா இடங்களிலும் தள்ளுவண்டியில் வைத்து கொண்டு கூடைகளில் வைத்தும் பானி பூரி விற்கப்படுகிறது. பானி பூரியானது புளிப்பு மற்றும் காரம் என்று நாக்கில் சுவையைத்தருகிறது பானி பூரி. மொறுமொறுவென இருப்பதால் அனைவருக்கும் பிடித்த ஒரு தின்பண்டமாக அமைகிறது. தெரு கடைகள் முதல் கண்ணாடியால் மூடப்பட்ட பெரிய ஹோட்டல்கள் வரை இந்த பானி பூரியானது … Read more

'ஹலோ 100! வரும்போது எனக்கு சரக்கு வாங்கிட்டு வாங்க!' – வடமாநில போலீஸை அலறவிட்ட இளைஞர்!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கோடார் எனும் ஊரை சேர்ந்தவர் உமா ஷங்கர், இவரது அப்பா அந்த ஊரில் மதுக்கடை வைத்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் உமாசங்கர் மகன் சச்சின் , போலீஸ் அவரச அழைப்பு எண்ணான 100-க்கு போன் செய்து மது வாங்கி வர சொல்லியிருக்கிறார். சச்சின் மேலும் கூறுகையில், ; இந்த ஊரில் எனது தாத்தாவின் மதுக்கடைதான் இருக்கிறது. அதனால், தனக்கு இங்கு மது தர மறுக்கிறர்கள். ஆகவே, நீங்கள் எனக்கு மது வாங்கி கொண்டு … Read more

லஞ்சம் கேட்டால் உடனே 14400 என்ற நம்பரை தொடர்பு கொள்ளுங்கள்! அதிரடி முதல்வரின் அடுத்த திட்டம்!

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து, முதல்வராக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி நலத்திட்டங்களை மக்களுக்கு அறிவித்து வருகிறார். மதுபான கடைகள் குறைப்பு, மதுபான பார் லைசென்ஸ் கட்டணம் கடுமையாக உயர்வு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அடுத்த அதிரடியாக ஆந்திர மாநிலத்தை லஞ்சம் இல்லாத மாநிலமாக உருவாக்க தற்போது புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளார். அதில் … Read more

11 ஆண்டுகள் ஆகியும் மாறாத வடு! மும்பை தாக்குதலின் உதிர துளிகள்!

11 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாள் இதே மாலை வேளையில் தான் லஷ்கர் – இ – தொய்பா தீவிவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளால் அந்த கோரச் சம்பவம் நடைபெற்றது. மும்பையில் ஆள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் முதல் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. ரயில் நிலையத்தில் திடீரென தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அங்கு 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 120 பேர் படுகாயம் அடைந்தனர். … Read more

இந்த செய்தியை படித்தால், நெருங்கிய உறவினர்களை கூட நீங்கள் சந்தேகப்பட வாய்ப்புள்ளது!

சென்னையில் ஒரு பொறியியல் பட்டதாரி, தனக்கு வேலை பறிபோனதால் தனது மனைவியுடன் சேர்ந்து உறவினர்கள் வீட்டிற்கு சென்று திருடிய சம்பவம் அப்பகுதியை அதிரவைத்துள்ளது. மேலும் நெருங்கிய உறவினர்கள் நண்பர்களை கூட நம்பமுடியாத சூழலை இந்த செய்தி சிலருக்கு ஏற்படுத்திவிடும் அபாயமும் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள ஜெகதீசன் என்பவர் காவல்நிலையத்தில், தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் திருட்டு நடைபெற்றுள்ளதாக புகார் அளித்து இருந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக ஜெகதீசனிடம் விசாரித்தனர். அப்போது … Read more

மஹாராஷ்டிரா புதிய துணை முதல்வர் மீதான 70,000 கோடி ஊழல் வழக்கு ரத்து!

மஹாராஷ்டிராவில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதலைமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார். இந்நிலையில் இதற்கு முன்னர் பாஜக அரசானது அஜித் பவார் மீது 70,000 கோடி நீர்பாசன திட்டத்தில் ஊழல் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுத்திருந்தது. அந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என ஊழல் தடுப்பு துறை அவரை விடுவித்து ஓர் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவர் மீதான இந்த 70,000 கோடி … Read more

பிரபல திரையரங்கின் மொட்டை மாடியில் ஊழியரின் சடலம்! கொலையா அல்லது விபத்தா?!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் இயங்கி வருகிறது பி.வி.ஆர் சினிமா திரையரங்கு மால். இந்த மாலின் மொட்டை மாடியில் நேற்று ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரின் சடலம் தற்போது மீட்கப்பட்டு போலீசார் இந்த மரணம் குறித்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஊழியர் டெல்லியை சேர்ந்தவர். இவர் பெயர் புவன்சந்திரா சர்மா. இவர் இந்த மாலில் வேலைக்கு சேர்ந்து 6 மாதங்கள் ஆகியுள்ளது. இவரது உடலில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இவர் … Read more

சாவி போட்டு ஏ.டி.எம்-ஐ திருட முயற்சித்த திருடன்! அலாரம் சத்தம் கேட்டதும் ஓட்டம்!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில், நேரு தெரிவில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது.  இங்கு நேற்று காலை வந்த வங்கி ஊழியர்கள் ஏடிஎம் எந்திரத்தின் சாவியை அந்த எந்திரத்திலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். நேற்று காலை 10 மணிக்கு வந்த நபர் ஒருவர், அந்த சாவியை கண்டவுடன் அதனை திருடி எடுத்து சென்றுவிட்டு, இரவில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஏடிஎம்-ஐ கொள்ளையடித்துவிடலாம் என எண்ணி இரவில் சாவி போட்டு ஏடிஎம்-ஐ திருட முயற்சித்துள்ளான். அந்த … Read more