பதக்க வேட்டையில் இந்தியா; சிங்ராஜ் அதானா வெண்கலம் வென்று சாதனை..!

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிங்ராஜ் அதானா வெண்கலம் வென்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,பாராலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என 7 பதக்கங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில்,இன்று நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிங்ராஜ் அதானா 216.8 மதிப்பெண்களைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.இதனால்,இந்தியா தனது பதக்க பட்டியலில் 8 வது பதக்கத்தை சேர்த்துள்ளது.