பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர் – கனிமொழி எம்.பி..!

பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 2020-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை ஆண்களுக்கு நிகராக 18-லிருந்து 21 ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார். சமீபத்தில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவை கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர், விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக்கான நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு … Read more

டெல்லியில் பிபின் ராவத் உடலுக்கு ராகுல் காந்தி, அமித்ஷா அஞ்சலி..!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோர் பிபின் ராவத் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.  குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், நேற்று, காலை வெலிங்டன் சதுக்கத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உடலுக்கு முக்கிய அதிகாரிகள் … Read more

புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படமாட்டாது- எம்.பி கனிமொழி..!

தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட மாட்டாது என எம்.பி  கனிமொழி தெரிவித்தார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்பக பரிசோதனை முகாமின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் எம்.பி  கனிமொழி கலந்து கொண்டார். விழாவில் பேசிய எம்.பி  கனிமொழி , ஒரு மாதம் நடைபெற்ற இந்த முகாமில் 650 பெண்களுக்கு மார்பக பரிசோதனை செய்யப்பட்டு 22 பேருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். அப்போது, தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட … Read more

தமிழகத்தில் திமுக ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து அதிமுக பயப்படுகிறது – எம்.பி. கனிமொழி..!

திமுக அடித்தளம் நன்றாக அமையவில்லை என பாஜகவின் அண்ணாமலை கூறுவது நகைச்சுவையாக உள்ளது என எம்.பி. கனிமொழி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தீத்தாம்பட்டி கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி எம்.பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் இந்த  கலந்துகொண்டனர். அப்போது பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. கனிமொழி, தமிழகத்தில் திமுக ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து … Read more

உலக சுற்றுலா தினம் : கனிமொழி எம்.பி ட்வீட்…!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் ட்வீட். இன்று நாடுமுழுவதும் உலக சுற்றுலா தினம் அனுசரிக்கப்படும் நிலையில், இந்த தினத்தை முன்னிட்டு, கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்  ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘உலக நாடுகள் வியக்கும் வகையில்,தொன்மையும் கலைச் சிறப்பும் மிக்க தமிழகம்,சுற்றுலாப் பயணிகளின் வேடந்தாங்கலாகத் திகழ்கிறது.அந்த வகையில்,உலக சுற்றுலா தினமான இன்று,நம் சுற்றுலா தளங்களை பாதுகாப்பாக வைப்பதோடு,சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்துவோம்.’ என பதிவிட்டுள்ளார். … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி எம்.பி….!

7.5 சதவிகித சிறப்பு உள் ஒதுக்கீட்டின் கீழ் பி.இ மாணவர் சேர்க்கை ஆணை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்த கனிமொழி எம்.பி. 7.5 சதவிகித சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 50 பேருக்கு சேர்க்கை ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ளார். இதன் மூலம், 11,000 பேர் பயன்பெறுவார்கள். உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி கல்வியின் பொற்காலமாக இந்த ஆட்சி … Read more

இது ஒரு நாடு..! இது ஒரு தேர்வு..! சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்…! – கமலஹாசன்

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் நீட் தேர்வு தொடர்பாக ட்வீட். கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தனுஷ் தற்கொலை  இந்த நீட் நுழைவு தேர்வை ரத்து செய்யுமாறு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையிலும், … Read more

தோல்வி பயத்தால் நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை…!

தோல்வி பயத்தால் நீட் தேர்வு எழுதிய கனிமொழி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை. இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். அந்த வகையில் அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கருணாநிதி ஜெயலட்சுமி தம்பதியினர். இவர்கள் இருவரும் வழக்கறிஞர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். அதில் இரண்டாவது மகனான கனிமொழி நாமக்கல் கிரீன் கார்டனில் பன்னிரண்டாம் வகுப்பில் … Read more

தன் நெருப்புச் சொற்களால் தீயவற்றைச் சுட்டெரித்த கவிப்போராளி – கனிமொழி

மகாகவி நாளான இன்று, அவரையும், அவரது எழுத்துகளையும் நினைவுகூர்வோம். இன்று நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார். இதனையடுத்து எம்.பி.கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன் நெருப்புச் சொற்களால் தீயவற்றைச் சுட்டெரித்த கவிப்போராளி. சுதந்திரம், பெண்ணுரிமை, சமத்துவம் என்று மக்களுக்காக தன் பேனாவை … Read more

கண்ணீர்க் கடலில் திசையறியாது தவித்தவர்களுக்கு திசைமானியான அறிவிப்பு…! – கனிமொழி எம்.பி.

இலங்கை தமிழ் மக்களுக்கு எதிர்கால திட்டங்களையும், கௌரவமான வாழ்க்கையையும் அறிவித்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏற்கனவே இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக சட்ட பேரவையில் இன்று இலங்கை தமிழர்களுக்கு, விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார். இதனையடுத்து, கனிமொழி எம்.பி அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘வாழ்விடமிழந்து, … Read more