வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி கேமரா பொருத்த அதிமுக கோரிக்கை!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் முறைகேடு நடப்பதாக மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் பாபு முருகவேல் புகார் மனு. வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடைபெற வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக வழக்கறிஞர் அணி பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் வெளி நபர்கள் அனுமதிக்க கூடாது என்றும் அதிமுக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் … Read more

இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் – 25.90% வாக்குப்பதிவு!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி வரை 25.90% வாக்குகள் பதிவு என தேர்தல் ஆணையம் தகவல். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 6ம் தேதி முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது 77.43% வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில … Read more

இன்று 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்ட தேர்தல்..!

இன்று 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.  தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட தேர்தலானது கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகின நிலையில், இன்று  இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிஅமைப்புகளுக்கான தேர்தல் மற்றும் இதர … Read more

முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் – 77.43% வாக்குகள் பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 77.43% வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் திருப்பத்துார் ஆகிய 9 மாவட்டங்களுக்கான முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு சென்ற 6ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம … Read more

கழக உடன்பிறப்புகள் எதற்கும் அஞ்சாத, யாருக்கும் அஞ்சாத செயல் மறவர்கள் – ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிக்கை

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலையையும், தனி மனித சுதந்திரத்தையும் பறிக்கின்ற வகையிலே, மனித உரிமை மீறளையும் திமுக கையில் எடுத்திருப்பதாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலையையும், தனி மனித சுதந்திரத்தையும் பறிக்கின்ற வகையிலே, மனித உரிமை மீறளையும் திமுக கையில் எடுத்திருப்பதாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ‘நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஊரக … Read more

போலீசாருக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை – கடலூர் எஸ்பி அதிரடி உத்தரவு!

அக். 9ம் தேதி தேர்தல் பணி முடிந்த பின் தொடர்ந்து 4 நாட்கள் போலீசாருக்கு விடுமுறை அளித்த கடலூர் மாவட்ட எஸ்பி. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்கள் அக் மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி, 9 மாவட்டங்களுக்கான முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் காலை 7 … Read more

#BREAKING: உள்ளாட்சி தேர்தல் – முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் இன்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்றது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நிலையில், தற்போது 6 மணியுடன் நிறைவு பெற்றது.

#BREAKING: முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் – 3 மணி வரை 52.40% வாக்குகள் பதிவு!

விழுப்புரம் மாவட்டத்தில் 3 மணி நிலவரப்படி 61.04 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என மாநில தேர்தல் ஆணையம் தகவல். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்று வரும் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.40% வாக்குகள் பதிவாகி உள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டையில் 49.70%, வேலூர் 52.32%, தென்காசி 55.29%, செங்கல்பட்டு 46.30%, கள்ளக்குறிச்சி 53.27%, திருப்பத்தூர் 41.24%, விழுப்புரம் 61.04% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் … Read more

#ElectionBreaking: உள்ளாட்சி தேர்தல் – 19.61% வாக்குப்பதிவு!

முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணிவரை 19.61% வாக்குகள் பதிவாகி உள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தகவல். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 19.61% … Read more

உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது – தேர்தல் ஆணையம்

மாநில தேர்தல் ஆணையம், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்.  தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. … Read more