உச்சிப்புளியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – பிளஸ்-1 மாணவரிடம் விசாரணை..!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கீழநாகாச்சி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தாள்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவர் சாக்லெட் வாங்கி தருவதாக கூறி சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்றான். அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுறது.

இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறி உள்ளாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ராமேசுவரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.