உங்களை விட நாய்கள் தான் முக்கியம் என மனைவி கூறியதால் வீட்டை விட்டு வெளியேறிய கணவர்

பிரிட்டனின் சப்போல்க் பகுதியில் வசிப்பவர் மைக் ஹாஸ்லாம். 53 வயதான இவரது மனைவி லிஸ் (49) நாய்கள் பிரியர். 1991-ம் ஆண்டு திருமணமான இவர்களுக்கு 21 வயதில் தற்போது மகன் உள்ளார். இந்நிலையில், நாய்களின் காரணமாக மைக் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
லிஸியின் தந்தை விலங்குகளுக்கான உணவு விற்கும் தொழில் செய்து வந்ததன் காரணமாக சிறுவயது முதலே லிஸ் விலங்குகள் பிரியராக இருந்துள்ளார். சமீபத்தில், 30-க்கும் மேற்பட்ட நாய்களை லிஸ் கண்டெடுத்து வளர்த்து வந்துள்ளார். எந்த நேரமும் நாயுடனே அவர் நேரத்தை செலவிட்டுள்ளார்.
பொறுத்து பொறுத்து பார்த்து ஒருநாள் பொங்கி எழுந்த மைக், “நான் முக்கியமா, இல்லை நாய்கள் முக்கியமா?” என கோபத்துடன் கேட்க, நாய்கள்தான் முக்கியம் என லிஸ் கூலாக பதில் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மைக் வீட்டை விட்டு வெளியேறப்போவதாக கூறியுள்ளார்.
வீட்டை விட்டு வெளியேறினால் தன்னை மனைவி தடுத்துவிடுவார் என நினைத்த மைக்-க்கு அடுத்த அதிர்ச்சியாக, “உங்கள் உடமைகளை பேக் செய்யவா?” என லிஸ் கேட்க புலம்பிய படியே வீட்டை விட்டு அவர் வெளியேறினார். “என்னைப்பற்றி மைக்-க்கு நன்றாக தெரியும். ஆனாலும், அவர் என்னை புரிந்து கொள்ளவில்லை. விதவையாக வாழ விரும்பவில்லை. அதனால், என்னை எனது நாய்களிடம் நான் ஒப்படைத்துவிட்டேன்” என லிஸ் கூறியுள்ளார்.