ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனு நிராகரிப்பு.! காரணம் இதுதான்….

ADMK OPS

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட செந்தில் முருகன் என்பவர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிட அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 70க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். வேட்புமனு ஏற்பு : இன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே … Read more

குக்கர் கிடைக்கவில்லை.. இடைத்தேர்தலில் இருந்து விலகுகிறோம்.! அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு.!

ttv dhinakaran

தேர்தல் ஆணையம் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்காத காரணத்தால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து தங்கள் கட்சி வேட்பாளர் விலகி கொள்வார் என அமமுக கட்சி தலைவர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அமமுக கட்சி சார்பில் சிவ பிரசாந்த் என்பவர் போட்டியிடுவார் என அக்கட்சி தலைவர் டிடிவி.தினகரன் அறிவித்தார். அதே போல சிவ பிரசாந்த் வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். … Read more

#Breaking : தென்னரசுக்கு ஆதரவில்லை.. இரட்டை இலை வெற்றி பெற வேண்டும்.! ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்.!

இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும். ஆதலால், அதற்கு தடையாக இருக்க கூடாது என்பதற்காக ஓபிஎஸ் அறிவித்த செந்தில் முருகன் போட்டியில் இருந்து விலகுகிறார். – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதே போல ஓபிஎஸ் தரப்பில் செந்தில்முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டு வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் வரை … Read more

ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம் : அதிமுக பொதுக்குழு கடிதம் மதியம் 3மணிக்கு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு.!

ஈரோடு இடைத்தேர்தலில் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிட அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த ஆதரவு கடிதம் மதியம் 3மணிக்கு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகனும் அறிவிக்கப்பட்டனர். இதில், இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவது என்ற குழப்பம் தொடர்ந்து வந்த நிலையில், உச்சநீதிமன்றம் வாய் வழக்கு சென்றது. அதில், இபிஎஸ் … Read more

இரட்டை இலைக்கு ஆதரவு.! ஓபிஎஸ் அறிவிப்பு.! பாஜகவின் ஒற்றுமை ஆலோசனை வெற்றி பெற்றதா.?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் இதுவரை நிகழந்த அடுத்தடுத்த நகர்வுகளை இந்த குறிப்பில் சுருக்கமாக காணலாம்.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நேரம் நெருங்க நெருங்க அரசியல் களத்தில் பரபரப்பு கூடிக் கொண்டே போகிறது. நாளுக்கு நாள் ஒவ்வொரு திருப்புமாக அரங்கேறி வருகிறது. ஏற்கனவே திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவேராவின் தந்தையுமான இவிகேஎஸ்.இளங்கோவன் திமுக … Read more

அதிமுக வேட்பாளராக இபிஎஸ் ஆதரவு வேட்பாளர் தென்னரசு.? அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் சுற்றறிக்கை.! 

அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்,  எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசுக்கு ஆதரவாக அனைத்து மாவட்ட செயலலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகனும் அறிவிக்கப்பட்டனர். இதனால் யார் போட்டியிட உள்ளனர் என்கிற விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. இதில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு , … Read more

ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்து செயல்பட வலியுறுத்தினோம்.! பாஜக நிர்வாகி சி.டி.ரவி பேட்டி.!

eps and ops annamalai bjp

திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினோம். – பாஜக நிர்வாகிகள் அண்ணாமலை மற்றும் சி.டி.ரவி செய்தியாளர்களிடம் பேச்சு.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் சேர்ந்து இன்று காலை எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் . அதே போல ஓ.பன்னீர்ச்செல்வம் அவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த இரு சந்திப்புகளை அடுத்து தற்போது பாஜக மாநில தலைவர் … Read more

பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.! இபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி.!

ponnaiyan

வடமாநிலங்களில் பாஜகவினர்களின் நடவடிக்கை பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். அதனால் நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறோம். இபிஎஸ் தரப்பு முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவில், இபிஎஸ் தரப்பில் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய ஆயத்தமாக இருக்கிறார்.  எடப்பாடி பழனிசாமியை  அண்ணாமலை சந்தித்த நிலையில் வேட்புமனு தாக்கல் தள்ளிவைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து … Read more

இடைத்தேர்தலில் இதுவரை இன்றைய நிலவரம்.! திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர்…

By Election

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் தேர்தல் நெருங்க நெருங்க பரபரப்பாகி கொண்டே செல்கிறது. தற்போது வரை எந்தெந்த கட்சியினர் வேட்டபுமனு தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரத்தை தற்போது பார்க்கலாம்.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைந்த பிறகு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே அறிவித்தது போல கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி … Read more

அதிமுக வேட்பாளர் தென்னரசு 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.! முன்னாள் அமைச்சர் நம்பிக்கை.!

eps

அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தென்னரசு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் போட்டியிடுவார். -முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.  இம்மாதம் (பிப்ரவரி) வரும் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சியினர் தங்கள் நிலைப்பாட்டை அறிவித்து தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.  ஒவ்வொரு பிரதான கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். திமுக சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் களமிறங்கி உள்ளார். … Read more