“திமுக அரசு பதவியேற்ற 3 மாதத்தில்;ஊழல்,கலெக்ஷன்&பழிவாங்குதல்” – இபிஎஸ் குற்றச்சாட்டு..!

ஆளும் திமுக-வினர், அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் மிரட்டி தங்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள் என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் மிரட்டும் அரஜாகப் போக்கை, திமுக-வினர் இனியாவது நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஆளும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு, நேற்று (28.10.2021) மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றிய வட்டார … Read more

அதிமுகவை அழிக்கவந்த பச்சை துரோகி எடப்பாடி பழனிசாமி – ஜே.எம்.பஷீர் குற்றசாட்டு!

அதிமுக என்ற கட்சி நல்ல இருக்க வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்க வேண்டும். அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இஸ்லாமியர்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்த எடப்பாடி என்று தெரிவித்து, இதன்தொடர்பான ஆதாரத்தை வெளியிட உள்ளேன். தொடர்ந்து இஸ்லாமிய துரோகி எடப்பாடி பழனிசாமியை கழகத்தை விட்டு நீக்க சொல்லி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கு கோரிக்கை வைத்து ஊடகங்களுக்கு பேட்டியளிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி, செய்தியாளர்களிடம் … Read more

பாஜகவுக்கு புயல் வேகத்தில் உயிரூட்டிக் கொண்டிருப்பவர் அண்ணாமலை – க.பாண்டியராஜன்

பாஜக என்றாலே ஒரு மெல்லிய பூங்காற்றாக இருப்பார்கள் என்ற எண்ணம் இருக்கும் காலத்தில், ஒரு புயல் வேகத்தில் அந்த கட்சிக்கு உயிரூட்டி கொடுப்பவர் அண்ணாமலை. அதிமுக முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்கள், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், பாஜக என்றாலே ஒரு மெல்லிய பூங்காற்றாக இருப்பார்கள் என்ற எண்ணம் இருக்கும் காலத்தில், ஒரு புயல் … Read more

ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளால் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. அந்த வகையில் தற்போது ஆனந்தன் என்ற இளைஞன் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்ற மென்பொருள் பொறியாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டது … Read more

அதிமுக ஆட்சியில் இ-சேவை மையம் முறையாக பராமரிக்கப்படவில்லை – அமைச்சர் மனோ தங்கராஜ்

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக மக்களை சந்திக்கவே இல்லை. இ-சேவை மையத்தை அதிமுக ஆட்சியில் சரியாக பராமரிக்கவில்லை சென்னையில் திருநகைகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மனோ தங்கராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக மக்களை சந்திக்கவே இல்லை என்றும், இ-சேவை மையத்தை அதிமுக ஆட்சியில் சரியாக பராமரிக்கவில்லை என்றும், … Read more

கட்சியை வளர்த்த நம்மால், கட்சி வீணாவதை பார்த்து கொண்டிருக்க முடியாது…! விரைவில் சந்திப்பேன்…! – சசிகலா

கட்சி வீணாவதை ஒரு நிமிடம் கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். சசிகலா அவர்கள் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை சென்று, வெளியே வந்த அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு பின்பு தான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் அறிவித்தார். இதற்கிடையில் சமீப நாட்களாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் அலைபேசி வாயிலாக பேசிவரும் ஆடியோக்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில், … Read more

#Breaking:”அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து குவித்ததற்கு முகாந்திரம் ” – தமிழக அரசு பதில் ..!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து குவித்ததற்கு முகாந்திரம் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக மதுரையை சார்ந்த மகேந்திரன் என்பவர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன்,ஆர்.ஹேமலதா அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்ததாக கூறி,வழக்கு 3 வது … Read more

“மீண்டும் மின்வெட்டு ஏற்படும் சூழல்;விலைவாசி உயரும் அபாயம்” – ஓபிஎஸ் எச்சரிக்கை…!

நிலக்கரி பற்றாகுறையால் தமிழகத்தில்  மின்வெட்டு ஏற்பட்டு, அனைத்துப் பொருட்களின் விலையும் உச்சத்தை தொடக்கூடிய நிலைமை ஏற்படும் என்று ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் அனல் மின் நிலையங்களில் 4 நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வருவது கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்னைப் பூமி: “அரும்பொருட்களை தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு, அவற்றின் வளத்தை அயராத உழைப்பாளர்களுக்கு அள்ளித் … Read more

ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உயர்நீதிமன்றம்

அதிமுக நிர்வாகியை தாக்கியதாக ராஜேந்திர பாலாஜி உள்பட 5 பேர் மீது சாத்துர் போலீசார் வழக்குப்பதிவு. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. முன்ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதிமுக நிர்வாகியை தாக்கியதாக ராஜேந்திர பாலாஜி உள்பட 5 பேர் மீது சாத்துர் போலீசார் வழக்குப்பதிவு … Read more

ஓபிஎஸ் பெயரை பயன்படுத்தி 47 லட்சம் மோசடி…! மதுரை எஸ்.பி-இடம் புகாரளித்த இளைஞர்…!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பெயரை சொல்லி ரூ.47 லட்சம் மோசடி. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன். இவர் கடந்த 2019-ல் இடுக்கியில் ஏலக்காய் ஸ்டேட் வாங்க முயற்சி செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கேரளாவை சேர்ந்த பாபு, மகேஷ் ஆகிய இருவரும் தென்காசியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மகன் என்று கூறி முருகேசன் என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர் குறைந்த வட்டியில் ரூ.10 கோடி ரூபாய் பணம் பெற்று தருவதாக பிரவீனிடம்  தெரிவித்துள்ளார். அதனை … Read more